திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

நடிகையின் பெயரை கெடுக்க நடக்கும் சதி.. இணையத்தில் லீக்கான படுமோசமான புகைப்படங்கள்

Gossip: டெக்னாலஜி வளர்ந்து விட்ட காலகட்டத்தில் நடிகைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இணையத்தில் மோசமாக சித்தரித்த புகைப்படங்கள் வெளியாவது இப்போது அதிகமாகி விட்டது.

சமீபத்தில் கிரஷ் நடிகை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவருடைய பேக் வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து திரை உலகில் ஒட்டு மொத்த பேரும் அவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர்.

ஆனாலும் இந்த மார்பிங் தொல்லையால் பல நடிகைகள் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். அதில் இளம் நடிகை ஒருவர் தற்போது சிக்கி இருக்கிறார். அவருடைய மோசமான புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வருகிறது.

நடிகைக்கு எதிராக நடக்கும் சதி

ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்து வந்த நடிகை இப்போது சோசியல் மீடியாவில் கொஞ்சம் கிளாமர் புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்த போட்டோக்களும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

வாய்ப்புக்காக நடிகை இப்படியெல்லாம் இறங்கி விட்டாரா என்று கூட பேசி வருகின்றனர். ஆனால் இதற்கும் நடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம். யாரோ சில விஷமிகள் பார்த்த வேலைதான் இது என அவர் நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம்.

எப்படியாவது இதை கண்டுபிடிக்க வேண்டும் இல்லை என்றால் பேரே டேமேஜ் ஆகிவிடும் என அவர் வருத்தத்தில் இருக்கிறாராம். ஆனால் நடிகையின் பெயரை கெடுக்க போட்டி நடிகை தான் இந்த அளவுக்கு இறங்கி இருப்பார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News