தமிழ் சினிமாவை பொறுத்தவரை அம்மன் கதாபாத்திரம் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் அந்த கதாபாத்திரத்தில் அவ்வளவு அம்சமாக பொருந்தி இருப்பார். அதனாலேயே அனைத்து இயக்குனர்களும் அவரை அம்மன் வேடத்தில் நடிக்க வைத்தனர்.
அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் ஏராளமான அம்மன் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து அசத்தியிருந்தார். இருப்பினும் அம்மன் என்றாலே பலரும் நினைவு கூறுவது ரம்யா கிருஷ்ணனை தான்.
Also read:இப்பவும் எனக்கு ஹீரோயின் மவுசு இருக்கு.. 52 வயதில் பகீர் கிளப்பும் கமலின் தோழி
ஆனால் அவருக்கு முன்பே ஒரு ஹீரோயின் அம்மன் வேடத்தில் கலக்கி இருக்கிறார். சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் முதன்முதலாக அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் இவர்தான். அவர் வேற யாரும் அல்ல புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்ட நடிகை கே ஆர் விஜயா தான்.
அந்த வகையில் இவர் மகாசக்தி மாரியம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அம்மன் கடவுளாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் இவர் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 70 காலகட்டத்தில் எல்லாம் ஏராளமான பக்தி திரைப்படங்கள் வெளிவந்தது.
Also read:ரம்யா கிருஷ்ணனின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட பிரபலம்.. பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்த நடிகர்
அப்போது வரும் அத்தனை திரைப்படங்களிலும் கே ஆர் விஜயா தான் அம்மனாக நடிப்பார். அந்த அளவுக்கு இவர் ரசிகர்கள் முன் அம்மன் போன்றே பார்க்கப்பட்டார். அதற்கு அவருடைய வசீகரமான அந்த சிரிப்பும் ஒரு காரணம். இதனாலேயே அவருக்கு அது போன்ற கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தது.
அதேபோன்று சில சின்னத்திரை சீரியல்களிலும் இவர் அம்மனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிறகு தான் ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் அம்மனாக நடிக்க ஆரம்பித்தனர். இருந்தாலும் கே ஆர் விஜயாவுக்கு அந்த கதாபாத்திரம் பக்காவாக செட் ஆனது தான் உண்மை.
Also read:கோர்ட், கேஸ் என்று அலைய முடியாது.. படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட ரம்யா கிருஷ்ணன்