வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாலாவுக்கு வக்காலத்து வாங்கும் நடிகை.. அடடா கெமிஸ்ட்ரிக்கு இதுதான் காரணமா?

பொதுவாக பாலா தன்னுடைய படங்களில் நடிகர், நடிகைகளை அதட்டி, உருட்டி வேலை வாங்க கூடியவர். இதனால் தான் பாலா படத்தில் நடிக்கவே பல பிரபலங்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பெரும்பாலான நடிகர்களுடன் பாலாவுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சண்டையும் ஏற்பட்டுள்ளது.

கடைசியாக சூர்யாவின் வணங்கான் படத்தை பாலா எடுத்து வந்தார். அப்போது இவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். அதுமட்டுமின்றி தனது 2d நிறுவனத்தையும் இந்த படத்தில் இருந்து விலக்கி விட்டார்.

Also Read : மீண்டும் மீண்டும் ஹீரோயினுக்கு வலைவீசிய பாலா.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம்

இப்போது அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்கி வருகிறார். பாலாவிடம் சிக்கி அருண் விஜய் என்ன பாடு படுகிறாரோ என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு எல்லாரும் பாலாவுக்கு எதிராக நிற்கும் நிலையில் அவருக்கு சப்போர்ட்டாக ஒரு நடிகை பேசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வணங்கான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் கீர்த்தி செட்டி. இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கீர்த்தி செட்டி பாலாவை பற்றி ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இயக்குனர் பாலாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Also Read : அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன், தம்பி நடிகர்கள்.. பாலா சூழ்ச்சி தெரியாமல் காத்து கிடந்த சோகம்

அதோடு மட்டுமின்றி பாலா எல்லா காட்சியையும் மிகவும் தத்ரூபமாக எடுக்க வேண்டும் என மெனக்கெட கூடியவர். அவருடைய படத்தில் நடிப்பது சந்தோஷம் என எக்க சக்கமாக புகழ்ந்து தள்ளி உள்ளார். இந்த விஷயம் தான் தற்போது பலருக்கும் நிரடலாக இருக்கிறது. ஏனென்றால் சூர்யா வணங்கான் படத்தில் நடித்த போது கீர்த்தி செட்டிக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் தனது ரூமுக்கு அருகிலேயே பாலா ரூம் போட்டு கொடுத்திருந்தார்.

அதுமட்டுமின்றி இப்படத்தின் சூட்டிங்கில் பாலாவுக்கும் கீர்த்தி செட்டிக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆவதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. கீர்த்தி செட்டி நடிக்கும் காட்சியை ஒரே டேக்கில் பாலா ஓகே சொல்லி விடுகிறாராம். இப்படி இருக்கும் சூழலில் கீர்த்தி செட்டி பாலாவை புகழ்ந்து பேசியது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்த பாலா.. சம்பளத்தை அப்படியே கொடுத்து தூக்கி விட்ட நடிகர்

Trending News