புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எந்த கேரக்டரா இருந்தாலும் பரவால்ல நான் ரெடி.. கடன் பிரச்சனையால் நடிகை எடுத்த முடிவு

Gossip: மூன்று எழுத்து பெயர் கொண்ட நடிகை அறிமுக படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். அதை அடுத்து அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் முதலுக்கு மோசம் இல்லாமல் இருந்தது.

நடிகையும் தன்னுடைய சிறப்பான நடிப்பு மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்தார். திறமையாக நடிக்க தெரிந்த நடிகை என பெயர் எடுத்த இவர் சில வருடங்களில் இருக்கும் இடம் தெரியாமல் போனார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்த கேரக்டர்கள் தான். ஒரு கட்டத்தில் வயதான பிரபலத்திற்கு ஜோடியாக நடித்த இவருக்கு அதன் பிறகு வாய்ப்பே கிடைக்கவில்லை.

கடன் பிரச்சனையில் தவிக்கும் நடிகை

இதனால் ஒரு பாடலுக்கு ஆடுவது சிறு காட்சிகளில் தலை காட்டுவது என காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனாலும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும் என ஓடிடி பக்கம் தலை காட்ட தொடங்கினார்.

சில வெப் தொடர்களில் நடித்திருக்கும் இவருக்கு கைநிறைய வருமானமும் வருகிறது. அதேபோல் சில படங்களும் அவர் கைவசம் இருக்கிறது. தற்போது கூட ஒரு படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

ஏற்கனவே கடன் பிரச்சனையால் சிக்கி வந்த இவருக்கு இது ஆறுதலாக இருக்கிறதாம். அதனால் தொடர்ந்து வெப்தொடர் மட்டுமல்லாமல் எந்த கேரக்டராக இருந்தாலும் நடித்த தயார் என சில தயாரிப்பாளர்களிடம் கூறி வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

Trending News