செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மணிரத்தினம் படத்தில் நடிப்பதற்காக 3 பட வாய்ப்புகளை தூக்கிப்போட்ட நடிகை.. 96 இயக்குனரை நிராகரித்த கொடுமை

Manirathinam Movie Actress: விசித்திரமான படங்களை எடுக்க கூடியவராகவும், எடுத்தால் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு படத்தை எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். அத்துடன் யாரென்று தெரியாதவர்கள் கூட மணிரத்தினம் படத்தில் நடித்தால் அவர்களுக்கு பேரும் புகழும் வந்துவிடும். அதனால் தான் மணிரத்தினம் இயக்கக் கூடிய படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தால் போதும் என்று பலரும் ஏங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது கமலை வைத்து மணிரத்தினம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் மற்ற படங்களில் நடிப்பதற்கு நடிகை மறுத்து விட்டார். இப்படத்தில் கமலுடன், ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், அபிராமி மற்றும் பலர் நடித்த வருகிறார்கள். இவர்களைப் போல இன்னொரு நடிகையும் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாய் இருக்கிறார்.

இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி (ஐஸ்வர்யா லட்சுமி) கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனால் தான் இவருக்கு மணிரத்தினத்தின் அருமை நன்றாகவே தெரிந்திருக்கிறது. மேலும் தொடர்ந்து இவருடைய படத்தில் நடித்து வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற முடியும் என்று தெரிந்து வைத்து இவருக்கு வந்த வாய்ப்பை உதறித் தள்ளி இருக்கிறார்.

Also read: மணிரத்னம் பட ஹீரோயினுடன் லிவிங் டுகதரில் இருக்கும் சித்தார்த்.. இன்ஸ்ட்டாவில் வைரலாகும் புகைப்படம்

அதாவது ரொமான்டிக் மற்றும் காதல் படத்தை இயக்கிய 96 படத்தின் இயக்குனர் பிரேம் ஒரு படம் பண்ணுவதாக இருந்தார். இதில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தும் அதை ஐஸ்வர்யா லட்சுமி மறுத்து இருக்கிறார். அடுத்ததாக கார்த்திக்குடன் மெய்யழகன் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டார். மூன்றாவதாக ஏ எல் விஜய் இயக்கம் படத்தையும் மறுத்திருக்கிறார்.

நடித்தால் மணிரத்னம் படத்தில் தான் நடிப்பேன் என்று வந்து வாய்ப்புகள் எல்லாம் நிராகரித்திருக்கிறார். ஏனென்றால் இதில் நடித்தால் நமக்கு இன்னும் பேரும் புகழும் கிடைக்கும் என்ற நினைப்பில் இதையெல்லாம் செய்திருக்கிறார். ஆனால் முன்னணி ஹீரோயினாக நடிக்கும் பல நடிகைகள் கிடைக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணாமல் நடித்து வரும் வேளையில் சைடு ஆர்டிஸ்ட் ஆக நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி மட்டும் ஏன் வந்த வாய்ப்பை நிராகரிக்க வேண்டும்.

கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தாலே மக்களிடம் பிரபலமாகிவிடலாம். அது தெரிந்தும் மணிரத்னம் படத்துக்காக இப்படி கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்தால் இனி அடுத்தடுத்து இவரை தேடி எப்படி வாய்ப்புகள் வரும் என்று சில இயக்குனர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

Also read: விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்படும் அல்வா.. மணிரத்னம் தலைமையில் கார்த்திக்கு பிரம்மாண்ட விழா

Trending News