திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்தரங்க காட்சியில் நடிக்க 45 வயதில் வந்த வாய்ப்பு.. கணவரின் கண்டிஷனால் நோ சொன்ன நடிகை

பொதுவாக நடிகைகள் சினிமாவில் எவ்வளவு காலம் படம் ஓடும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான். ஏனென்றால் திருமணத்திற்கு முன் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் நடுவில் ஒரு பிரேக் எடுத்து விட்டு வந்தால் அப்படியே தலைகீழாய் மாறிவிடும். அப்படிதான் நடிகை ஒருவர் கல்யாணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

பிள்ளைகள் சற்று வளர்ந்த உடன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது 40 வயதை கடந்தது என்பதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதுவும் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை தான் வாங்கிக் கொடுத்தது. ஆனால் திடீரென அவர் எடுக்கும் முடிவு எல்லாமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read : காசுக்காக நடிகையை வலுக்கட்டாயமாக அந்தரங்கத் தொழிலில் தள்ளிய இயக்குனர்.. மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சு

அதாவது மீண்டும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்பதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து வருகிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் போது சற்று குண்டாகத்தான் இருப்பார். இப்போது பார்த்தால் படு ஸ்லிம்மாக மாறிவிட்டார். அதுவும் அக்கட தேசத்தில் 40 வயதுக்கு மேல் உள்ள நடிகைகளுக்கு மார்க்கெட் அதிகம்.

இதனால் நடிகையிடம் ஒடிடி நிறுவனம் ஒன்று அந்தரங்க படத்தில் நடிக்க கேட்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் வெப் சீரிஸ் ஒன்றில் படுமோசமான கவர்ச்சியில் நடித்திருந்தார். இதுவே படத்திற்கு பிரமோஷனாக அமைந்து எக்கசக்க கலெக்ஷன்களை குவித்தது. இதனால் தான் நடிகையும் அதுபோன்ற படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் நடிகையின் கணவர் குடும்பம் மிகவும் கட்டுக்கோப்பான குடும்பம். ஆரம்பத்தில் நடிகையை திருமணம் செய்து கொள்ளவே பல எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் கணவர் மீண்டும் சினிமாவில் நடித்தாலும் மோசமான காட்சியில் நடிக்க கூடாது என ஏற்கனவே கண்டிஷன் போட்டுள்ளார். இதனால் குடும்ப வாழ்க்கை பறி போகுமா என்ற பயத்தில் நடிகை 45 வயதில் அந்தரங்க காட்சியில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம்.

Also Read : பண முதலையிடம் சிக்கிய நடிகை.. பலான தொழிலில் தள்ளி கண்டமாக்கிய பெரும்புள்ளி

Trending News