திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

திருமணமான இயக்குனர் மேல் வந்த வெறித்தனமான காதல்.. கை கூடாததால் விபரீத முடிவை தேடிய நடிகை

ஒரு காலத்தில் வசீகர முகமும், குண்டு கன்னங்களும் என இருந்த நடிகை ஒருவர் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

அதை எடுத்து சில காலம் நடிப்புக்கு பிரேக் விட்ட நடிகை பூரண குணமடைந்து மீண்டும் நடிக்க வந்த போது வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவது, தங்கை கதாபாத்திரம் என கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார்.

Also read: அந்த விஷயத்தில் திருப்தி அடையாத சீனியர் நடிகை.. மாஸ்டர் பிளான் போட்டு காரியத்தை சாதித்த சம்பவம்

ஆனால் சில வருடங்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது. இதற்கு முக்கிய காரணம் நடிகை இயக்குனர் ஒருவரின் மேல் வைத்திருந்த காதல் தான். ஏனென்றால் அந்த இயக்குனர் மனைவி, குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

இதெல்லாம் தெரிந்தும் அவரை தீவிரமாக காதலித்து வந்த நடிகை அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது கைகூடாமல் போனதால் விரக்தியில் இருந்த நடிகை சின்னத்திரை பக்கம் சீரியலில் நடிக்க தொடங்கினார். இதையெல்லாம் பார்த்த பலரும் நடிகை ஓரளவுக்கு சரியாகி விட்டார் என்று நினைத்த வேளையில் இடி போல் வந்தது அவருடைய மரணச் செய்தி.

Also read: குடிபோதையில் கணவரின் நண்பருடன் நெருக்கமான நடிகை.. புகுந்த வீட்டில் வெடித்த பூகம்பம்

காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த நடிகை திடீரென ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார். இப்படி தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக் கொண்டு அவசரப்பட்டு இறப்பை தேடிக்கொண்ட இந்த நடிகையை பற்றிய வருத்தம் இப்போதும் கூட மூத்த கலைஞர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

Trending News