சினிமாவில் ஒரு சில படங்கள் இணைந்து நடித்தாலும் திரையில் எந்த அளவிற்கு அவர்களது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதோ, அதைவிட அதிகமாக திரை மறைவில் அந்த ஜோடி உருகு உருக காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த நடிகைக்கு யாருக்கும் நடக்காத கொடுமை நிகழ்ந்திருக்கிறது.
இதனால் அவரும் இத்தனை வருடங்களாக பொத்தி பொத்தி வைத்திருந்த கணவரின் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டார். அந்த நடிகை ஆசை ஆசையாய் காதலித்த கணவர் சொன்ன ஒரே காரணத்திற்காக தன்னுடைய நடிப்பையும் 10 வருடங்களாக விட்டுவிட்டார்.
Also Read: நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நடிகை.. மோசமான காட்சியில் நடிக்க காரணம்
இவ்வளவு செய்த பின்பும் அந்த நடிகருக்கு குடும்ப குத்து விளக்காக வீட்டில் இருக்கக்கூடிய மனைவி பத்தாது என்று இன்னொரு நடிகையுடன் ரகசிய உறவில் இருந்து வந்திருக்கிறார். ஒருமுறை அந்த நடிகை இருவரையும் தன்னுடைய வீட்டிலேயே ஒரே கட்டிலில் பார்த்ததும் தூக்கி வாரி போட்டு விட்டது.
இனிமேல் இவருடன் சேர்ந்து வாழவே கூடாது என 43 வயதில் தன்னுடைய ஆசை கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் தனித்து வாழ்ந்து வருகிறார். முதலில் இந்த காதல் ஜோடி பிரிவதற்கு இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தான் காரணம் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்த நடிகை அளித்த பேட்டியில் மூலம் தான் எதற்காக கணவரை விவாகரத்து செய்தார் என்பதை குறித்த உண்மையை போட்டுடைத்தார்.
Also Read: காதல் தோல்வி, துரோகத்தால் பறிபோன உயிர்.. 21 வருடங்களுக்கு பிறகு பாவமன்னிப்பு கேட்டு கதறும் நடிகை
ஆசை ஆசையாய் காதலித்த கணவர் இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதை எப்போது பார்த்தாரோ, அந்த நிமிடம் அவரை தூக்கி எறிந்தவர் தான் இப்போது வரை அவர் பக்கம் கூட திரும்பாமல் தனித்து வாழ்ந்து வருகிறார். இன்னமும் அந்த நடிகர் ரகசிய நடிகையுடன் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்.