வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நயன்தாராவுக்கு முன் வாரிசு நடிகையை வெறித்தனமாக காதலித்த பிரபுதேவா.. நாட்டாமை என்ன செஞ்சாரு தெரியுமா?

Actor Prabhu Deva: நயன்தாரா மற்றும் பிரபுதேவா இருவரின் காதல் ஊர் அறிந்த விஷயம் தான். ஆனால் பிரபுதேவாவின் மனைவி இவர்கள் இருவருக்கும் இடையே நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தி ஒரு வழியாக பிரித்து விட்டார். ஆனால் நயன்தாராவிற்கு முன்பே பிரபுதேவாவை வாரிசு நடிகை ஒருவர் வெறித்தனமாக காதலித்திருக்கிறார்.

இந்த விஷயம் அவருடைய அப்பாவிற்கு தெரிந்ததும் அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. நாட்டாமை என சொன்னால் முதலில் ஞாபகத்திற்கு வருவது நடிகர் விஜயகுமாரின் முகம் தான். இவருடைய மூத்த மகள் வனிதா ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் பட வாய்ப்பு சரியாக வராததால் ஒதுங்கி விட்டார்.

Also Read: திருமணமான நடிகர்களை வளைத்து போட்டு பின் பிரிந்து சென்ற 6 நடிகைகள்.. வசமாக சிக்கிய விக்கி-நயன் ஜோடி

பின்பு அவருடைய பர்சனல் பிரச்சனை மூலமும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிப்படையாக பேசியும் பெரும் சர்ச்சையை கிளப்பியதால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனால் இப்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். சினிமாவிலும் சின்னத்திரையிலும் படு பிஸியாக இருக்கும் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபுதேவாவின் மீது இருந்த காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபுதேவாவின் தீவிர ரசிகையான வனிதா, அவரை காதலித்ததாகவும் கூறினார். அவருடைய படங்கள் வெளி வந்ததும் அவர் தொடர்பான அனைத்து செய்திகளையும் ஆர்வத்துடன் சேகரிப்பாராம். அதை தன்னுடைய அறை முழுக்க ஒட்டி வைப்பாராம். கனவில் பிரபுதேவாவுடன் டூயட் ஆடுவாராம். ஒருமுறை அவருடைய அப்பா விஜயகுமார் இவருடைய காதலை பார்த்து பிரபுதேவாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Also Read: பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்

அவர் வருவதை அறிந்து உற்சாகமாக வனிதா நிறைய அசைவ உணவை சமைத்து வைத்துள்ளார். ஆனால் பிரபுதேவா அசைவு உணவை உண்ண மாட்டார் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதை காட்டாமல் முட்டையை சமைத்து பரிமாறினாராம். மேலும் சில நாட்களுக்குப் பிறகு வனிதாவும் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டாராம்.

அந்த அளவிற்கு பிரபுதேவாவின் மீது பைத்தியமாகவே வனிதா இருந்துள்ளாராம். 3 திருமணத்தை செய்து அசால்ட்டு கட்டிய வனிதாவிற்கு பிரபுதேவா மட்டும் கிரீன் சிக்னல் காட்டி இருந்தால் அந்த 3 பேரில் அவரும் ஒருவராகி இருப்பார் என இந்த விஷயத்தை அறிந்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

Also Read: 60 படங்களில் நடித்தும் 15 படம் கூட வெற்றி காணாத நடன இயக்குனர்.. புதுசா வெளிவந்து ட்ரெய்லரால் அதிர்ந்து போன திரையுலகம்

Trending News