வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

தயாரிப்பாளரை வளைத்து போட்ட நடிகை.. சந்தேக புத்தியால் ஏற்பட்ட நஷ்டம்

நடிகை சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு ஒரு நல்ல நிலையில் இருந்தார். ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் நடிகை பெத்த தயாரிப்பாளர் ஒருவரை வளைத்து போட்டார். அவரும் நடிகையை உருகி உருகி காதலித்து வந்தார்.

இந்த சூழலில் இருவரும் அடிக்கடி வெளிநாடுகள் பறந்து வந்தனர். மேலும் இந்த விஷயம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி ஊர், உலகமே தெரிந்து விட்டது. சரி உடனடியாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் மற்றும் நடிகைக்கு மிக பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் வரை சென்றது.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

ஆனால் அதன் பிறகு தயாரிப்பாளர் பற்றி மோசமான விஷயங்களை அக்கம் பக்கத்தினர் நடிகையிடம் கூறியிருக்கின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை கல்யாணத்தை நிறுத்திவிட்டார். தயாரிப்பாளர் தன்னை நம்பு என்று எவ்வளவோ சொல்லியும் நடிகை கேட்ட பாடு இல்லை.

அதன் பிறகு நடிகை சில படங்களில் நடித்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடன் ஒரு படத்தில் நடித்த நடிகர் மீது காதல் வயப்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். இப்போது குழந்தைகள், குடும்பம் என்று ஆகிவிட்டது. ஆனால் இப்போது வயதானதால் நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

இதனால் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். சந்தேக புத்தியால் தான் நடிகையின் வாழ்க்கை இவ்வாறு தலைகீழாக மாறிவிட்டது என பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டிருந்தால் அவரது வாழ்க்கையே வேறு மாதிரி இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

Trending News