சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குழந்தையை வைத்து செட்டில்மெண்ட் வாங்கும் நடிகை.. விழி பிதுங்கி நிற்கும் தொழிலதிபர்

நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்கும் போதே தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணமான சில வருடங்களிலேயே நடிகை வாரிசை பெற்றெடுத்து விட்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிகை சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார்.

தொழிலதிபர் கணவரோ தன்னிடம் சொத்து அதிகமாக இருப்பதால் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். ஆனால் அவரின் பேச்சை மீறி நடிகை சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது சில நடிகர்கள் உடன் நடிகைக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த விஷயம் கணவரின் காதுக்கு விழ பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போனதால் விவாகரத்து வரை சென்றது. இதை சாக்காக வைத்துக்கொண்டு நடிகை தனது கணவனின் சொத்துக்களை வாங்குவதற்காக ஜீவானம்சம் கேட்டு இருக்கிறார்.

Also Read : பெரும்புள்ளியை வளைத்து போட்டு பண மழையில் நனைந்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கைக்கு விரித்த வலை

இதனால் தொழில் அதிபர் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நடிகை விவாகரத்து ஆன உடனே தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனாலும் குழந்தையை தொழிலதிபர் கைவசம் கொடுத்தால் ஜீவானம்சம் கிடைக்காமல் போய்விடும் என்பதால் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். தொழிலதிபர் தன்னிடம் குழந்தை வளர வேண்டும் என்று கூறுகிறார். மேலும் கோர்ட் தான் யாரிடம் குழந்தை வளர வேண்டும் என்பதை முடிவு செய்ய போகிறது.

Also Read : காதல் கணவரை கழட்டிவிட்ட கிளாமர் குயின்.. கோடீஸ்வர தொழிலதிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்

Trending News