Gossip: பிரபல நடிகை சோஷியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் ரொம்பவும் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்வது தான் அவரின் வழக்கம்.
ஆனால் திடீரென நடிகை இப்போது ஹோம்லியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் என்னாச்சு நடிகைக்கு என குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஆனால் விசாரித்ததில் நடிகை தன் காதலரிடம் வாங்கிய அர்ச்சனையால் தான் இப்படி மாறிவிட்டாராம். பிரபல நடிகருடன் இந்த நடிகை நெருக்கம் காட்டி வருவது திரையுலகில் அனைவருக்கும் தெரியும்.
காதலர் விட்ட டோஸ் அப்படி
இத்தனைக்கும் நடிகர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் இருப்பவர். ஆனால் படத்தில் நடிக்கும் போது இந்த நடிகையுடன் அவருக்கு நிஜத்திலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
இருவரும் ரகசியமாக சந்தித்து தங்கள் நெருக்கத்தை வளர்த்து வருகின்றனர். விரைவில் நடிகர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகையுடன் இணைவார் என்று கூட பேசுகின்றனர்.
இந்த நிலையில் தான் நடிகை கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு காதலரிடம் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார். இனி இப்படி செய்தால் அவ்வளவுதான் என நடிகர் டென்ஷன் ஆனதால் தான் இப்போது ஹோம்லி போட்டோக்களை பகிர்ந்து வருகிறாராம்.