முன்பெல்லாம் ஹீரோயின்களுக்கு ஆட தெரியுமா, நடிக்க தெரியுமா என்று பார்த்து தான் படங்களில் நடிக்க வைப்பார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. கிளாமருக்கு என்று தனியாக நடிகைகள் இருந்த காலம் போய் இப்போது ஹீரோயின்களே படு கிளாமராக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒரு நடிகை கெட்ட வார்த்தை பேசி காட்டியே ஹீரோயின் சான்ஸ் வாங்கி இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த அந்த நடிகைக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் துண்டு துக்கடா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
Also read : மல்கோவா ஆண்ட்டியை ஓவர்டேக் செய்யும் கேரள கப்பக்கிழங்கு.. காசுக்காக போட்டி போடும் கவர்ச்சி ஆட்டம்
அதன் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த அவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் தான் அவருக்கு முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அவரை அணுகிய இயக்குனர் உங்களுக்கு முதலில் கெட்ட வார்த்தை பேச தெரியுமா என்று தான் கேட்டாராம். ஏற்கனவே நடிகை தர லோக்கலில் இறங்கி பேசுவார்.
Also read : தயாரிப்பாளரை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கணவர்.. கொதித்துப் போய் விவாகரத்து செய்த நடிகை
இதில் இயக்குனரே அப்படி பேசச் சொன்னால் சும்மாவா விடுவார், ஏண்டா அவரை இப்படி கேட்டோம் என்று இயக்குனர் வருத்தப்படும் அளவுக்கு ஆண்களே பேச தயங்கும் கெட்ட வார்த்தைகளை எல்லாம் அந்த நடிகை சரமாரியாக பேசினாராம்.
அதைக் கேட்ட இயக்குனருக்கு தான் காதில் ரத்தம் வராத குறையாக இருந்ததாம். இருந்தாலும் இப்படி ஒரு பெண் தான் அந்த கேரக்டருக்கு வேண்டும் என்ற சந்தோஷத்தில் அவர் அந்த நடிகைக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்திற்குப் பிறகு நடிகைக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதை தொடர்ந்து இப்போது அந்த நடிகை பல மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.