சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அரசனை நம்பி புருசனை கைவிட்ட நடிகை.. பட வாய்ப்பு இல்லாமல் சீரியல் பக்கம் தாவும் அம்மணி

Gossip: பிரபல சேனலில் வேலை பார்த்தவர் தான் அந்த பிரபலம். ஆனால் புகழ்பெற்ற அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கைவசம் இருந்த நல்ல வேலையை கொஞ்சம் கூட யோசிக்காமல் உதறித் தள்ளினார்.

ஆரம்பத்தில் அந்த ரியாலிட்டி ஷோவில் அவர் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஆக இருந்தார். ஆனால் போகப் போக அவருடைய பேச்சும் நடவடிக்கையும் எரிச்சல் ஊட்டியது. அதனாலேயே அவர் ஆடியன்ஸின் வெறுப்புக்கு ஆளானார்.

ஒருவழியாக அந்த நிகழ்ச்சியை முடித்த நடிகைக்கு பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹீரோயின் ஆக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம் தான் வந்தது. அதை ஏற்றுக்கொண்டு நடித்த நடிகை அதன் பிறகு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார்.

பிரபல சேனலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை

ஆனால் எந்த பட வாய்ப்புகளும் வராத நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதேபோல் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்படி கல்லாகட்டி வந்த நடிகைக்கு தொகுப்பாளினி வேஷமும் கை கொடுக்கவில்லை.

அதை அடுத்து அதே சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் அவர் இப்போது என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் அந்த சீரியல் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆடியன்ஸ் இதுக்கு முடிவே இல்லையா என கதறினாலும் இயக்குனர் கதையை வேறு வேறு பாதையில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் தொகுப்பாளினிக்கு சின்னத்திரையாவது கை கொடுக்குமா தெரியவில்லை. அரசனை நம்பி புருஷனை கைவிட்டு இப்படி தவியாய் தவிக்கிறார் இந்த நடிகை.

சின்னத்திரை சீரியலுக்கு வரும் நடிகை

Trending News