திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நஸ்ரியா மட்டும் இல்லன்னா பகத்துக்கு முத்தம் கொடுத்திருப்பேன்.. ஓப்பனாக ஆசையை வெளிப்படுத்திய நடிகை

Actor Fahad Fazil: மலையாள சினிமாவின் பொக்கிஷமாக இருக்கும் பகத் பாசில் இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான நடிகராக மாறிவிட்டார். அது மட்டுமல்லாமல் படத்திற்கு படம் இவர் காட்டும் வித்தியாசம் இவருக்கான ரசிகர்கள் வட்டத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் நஸ்ரியா மட்டும் இல்லன்னா பகத்துக்கு முத்தம் கொடுத்து இருப்பேன் என்று ஒரு நடிகை ஓப்பனாக பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் பகத் பாசில் அட்டகாசமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

Also read: உதயநிதி அரசியலுக்கு அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. முதலும் கடைசியுமா வசூலை அள்ளிய மாமன்னன்

அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் டப்பிங் ஆர்டிஸ்ட்டும், நடிகையுமான ரவீணா. ஒரு காட்சியில் இவர் பகத் பாசிலை கட்டிபிடிக்கும் போது தவறுதலாக இவருடைய லிப்ஸ்டிக் அவரின் சட்டையில் ஒட்டி இருக்கிறது. இதனால் அவர் ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டாராம்.

ஏனென்றால் ரவீணா அவரிடம் நான் மேக்கப் போட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இருப்பினும் சந்தேகப்பட்ட பகத் அவரிடம் லிப்ஸ்டிக் போடுவீர்களா என்று கேட்டிருக்கிறார். அப்போது கூட அவர் என்னுடைய உதடு கலரே அதுதான் என்று கூறி சமாளித்திருக்கிறார்.

Also read: ஃபகத் பாஸில் தமிழில் கலக்கிய 5 படங்கள்.. நடிப்பு அரக்கன் என மூக்கில் விரல் வைத்த கமல்

ஆனால் அந்த காட்சியின் போது அவருடைய குட்டு வெளிப்பட்டிருக்கிறது. இதனால் கடுப்பான பகத் அவரிடம் என்னிடம் பொய் சொன்னியா என்று கோபப்பட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை கூறிய ரவீணா அந்த காட்சியின் போது படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவரும் நான் அவருக்கு முத்தம் கொடுத்து விட்டதாக கிண்டல் அடித்தார்கள்.

ஒருவேளை அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நான் நிச்சயம் முத்தம் கொடுத்து இருப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த விஷயம் மட்டும் நஸ்ரியா காதுக்கு சென்றால் என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுத்திருப்பார் என தெரியவில்லை. ஆனாலும் ரவீணா தைரியமாக இப்படித் தன் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also read: உருவ ஒற்றுமையிலும் பகத் பாசிலுக்கு டஃப் கொடுத்த வில்லன்.. நடிப்பிலும் மிரட்டும் பீஸ்ட் பட நடிகர்

Trending News