திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரேக் அப் ஆன கையோடு அடுத்த காதலரை பிடித்த நடிகை.. இந்த காதலாவது நிலைக்குமா

Gossip: காதல் பிரேக் அப் எல்லாமே இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அதிலும் அந்த வாரிசு நடிகை அப்பாவுக்கு போட்டியாக அடுத்தடுத்து காதலரை மாற்றிக் கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே மூன்று எழுத்து நடிகருடன் நெருக்கம் காட்டினார். அது ஒரு பஞ்சாயத்தாக மாறிய நிலையில் அடுத்து சில ஹீரோக்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

ஆனால் இதெல்லாம் அரசல் புரசலாக வெளிவந்த செய்தி தான். வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்த நடிகை அதை பகிரங்கமாக மீடியா முன் காட்டிக் கொண்டார். இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று கூட செய்திகள் வெளிவந்தது.

அடுத்த காதலரை பிடித்த நடிகை

ஆனால் திடீரென இருவருக்கும் முட்டிக்கொண்டதில் வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்புக்கு தாவினார் நடிகை. இருவரின் போட்டோக்கள் வீடியோக்கள் கூட மீடியாவில் வெகு பிரபலம். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு காதலரை பிரிந்த நடிகை சோக கீதம் வாசித்து வந்தார். ஆனால் இப்போது பார்த்தால் நடிகை ஒரு தொழிலதிபரை பிடித்து விட்டாராம். இருவரும் பொது இடங்களுக்கு வந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆனால் நடிகை இது குறித்து சோசியல் மீடியாவில் எந்த போட்டோவும் பகிரவில்லை. இருந்தாலும் கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். இந்த காதலாவது நடிகைக்கு நிலைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News