இன்று வரை சர்ச்சையில் சிக்காத நடிகை.. அஜித்துடன் ஜோடி சேர்ந்து ஹிட் கொடுத்த ஹீரோயின்

அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படமான விடாமுயற்சி படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஹிட் படத்தில் ஜோடியாக இணைந்து நடித்த ஹீரோயின் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் அஜித் சந்தித்த சிரமங்கள் ஏராளம். அதை மீறி இவர் சாதித்த படங்கள் பல ஹிட் கொடுத்துள்ள நிலையில் அஜித் மட்டும் தேவயானி இணைந்து நடித்த படம் தான் காதல் கோட்டை. இப்படத்தில் இவர்களின் ஜோடி பொருத்தம் பெரிதும் பேசப்பட்டது.

Also Read: எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்

அவ்வாறு படத்தில் அவருடன் இணைந்து நடித்த சக ஹீரோயின்கள் அவரிடம் பேசி பழகுவார்கள். ஆனால் தேவயானி மட்டும் படபிடிப்பிற்கு வருவாராம் வந்தவுடன் அவரின் காட்சிகள் இடம் பெறும் பொழுது நடித்துவிட்டு யாரிடமும் பேச சென்று விடுவாராம்.

இன்று வரை இவர் சினிமா ரீதியாக எந்த ஒரு பார்ட்டிக்கும், ஃபங்ஷனுக்கும் சென்றதும் இல்லையாம். அவ்வாறு தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுக்கும் இடம் கொடுக்காத ஒரே நடிகை என்ற பெருமையை பெற்று வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து நடித்த காதல் கோட்டை படத்திலும் இவர் மீது எந்த கிசுகிசுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தினா படம் ஓடுமா.? தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய ஆதிபுருஷ் பிரபாஸ்

அவ்வாறு இருந்த இவர் இயக்குனரான ராஜ்குமாரை காதலித்ததால் ஏற்பட்ட பிரச்சனையே பெரிதாக பேசப்பட்டது. பிரச்சனைகளை சுமூகமாக கொண்டு சென்று அவரையே திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் கணவனின் ஊரான அந்தியூரில், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தயார் செய்து கொண்டார்.

சில காலம் அங்கு இருக்கும் பள்ளியிலும் வேலை செய்துள்ளார். அவ்வாறு இவர் மேற்கொண்ட சினிமா பயணத்திலும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் இவர் பலருக்கு உதாரணமாக இருந்து வருகிறார். மேலும் கோவாவில் மார்டன் கலாச்சாரத்தை சேர்ந்த இவர் தற்பொழுதுவரை தன் கணவனின் கிராமத்து கலாச்சாரத்தை விருப்பத்துடன் பின்பற்றி வருகிறார்.

Also Read: திரும்பத் திரும்ப வேதாளத்துக்கு வரும் வம்பு.. லண்டன் போனாலும் சிம்புவை துரத்தி வெச்ச பெரிய ஆப்பு