புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பழைய காதலை புதுப்பித்துக் கொண்ட நடிகை.. வயித்தெரிச்சலில் இருக்கும் ஹீரோவின் ரகசிய காதலி

ஹீரோவுக்கு குடும்பம், குழந்தை என உள்ள நிலையில் நடுவில் ஒரு நடிகையால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. ஆரம்பத்தில் மனைவி சொல்லே மந்திரம் என்று இருந்த நடிகர் ஹீரோயினுடன் ஒரு படத்தில் நடித்த உடன் அப்படியே முழுசாக மாறிவிட்டார். அந்த நடிகையை கதி என்று கிடந்ததால் ஹீரோவின் மனைவிக்கு கோபம் வந்துவிட்டது.

இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க குழந்தைகளை கூட்டிக்கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார் மனைவி. இதுதான் சாக்கு என்று அந்த நடிகையுடன் உல்லாசமாக இருந்து வந்தார் ஹீரோ. ஆனால் இப்போது ஹீரோவின் ரூட் மாறிவிட்டது. அதாவது ஒரு காலத்தில் ஹீரோ உடன் ஒரு நடிகை அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

கெமிஸ்ட்ரி என்றால் இவர்களுக்கு தான் ஒர்க் அவுட் ஆகிறது என கோலிவுட் வட்டாரமே ஆச்சரியப்பட்டு பேசியது. ஆனால் அதன் பிறகு நடிகையின் மார்க்கெட் சரியா அக்கட தேசத்திற்கு சென்று விட்டார். மேலும் ஹீரோ சினிமாவில் உச்சத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை.

அதேபோல் இந்த ஹீரோ உடன் பல வருடங்களுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் எப்படி பத்திக்குமோ அதேபோல் இவர்களது பழைய காதலை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து சுற்றி வருகிறார்கள்.

இந்த விஷயம் ஹீரோவின் மனைவிக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்பது தெரியவில்லை. ஆனால் அவருடைய ரகசிய காதலி இந்த நடிகை மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். எப்படியாவது அவரை விரட்டி அடிக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read : பெரும் புள்ளிகளை வளைத்து போடும் சீரியல் நடிகை.. அந்தரங்க வேலை பார்த்து வாய்ப்பை பிடிக்கும் கேவலம்

Trending News