வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

செலிபிரிட்டி என்ற பெயரில் அந்தரங்க இடத்தை தொட்றாங்க.. கேவலமான செயலால் மீடியாவை வெறுத்த நடிகை

நடிக்க வந்து விட்டாலே நடிகைகள் என்ன பப்ளிக் ப்ராப்பர்ட்டியா என்று நினைக்கும் அளவுக்கு பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் ஒருபுறம் இருந்தாலும் நடிகைகளை பொது இடம் என்று கூட பார்க்காமல் சீண்டும் சில வேலைகளையும் பிரபலங்கள் பார்த்து வருகின்றனர்.

அப்படி ஒரு அனுபவத்தால் தற்போது மீடியாவை விட்டே வெறுத்து ஒதுங்கி இருக்கிறார் பிரபல நடிகை ஒருவர். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த பல நடிகைகள் இப்போது தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். அப்படி ஒரு ஆசையுடன் தான் அந்த சின்னத்திரை நடிகையும் வெள்ளி திரைக்குள் காலடி வைத்தார்.

Also read: பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட சீரியல் கவர்ச்சி புயல்.. வாய் கொழுப்பால் நடந்த விபரீதம்

அதன் பலனாக முதல் படத்திலேயே அவருக்கு மிகப்பெரிய கூட்டணியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட நடிகை அந்த படத்தின் மூலம் தன் திறமையை நிரூபித்தார். அதை எடுத்து அவருக்கான வாய்ப்புகளும் வரத்தான் செய்தது. ஆனால் நடிகை சினிமாவே வேண்டாம் என்று தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி போயிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் செலிபிரிட்டி என்ற பெயரில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் தான். அதாவது அந்த நடிகை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது சில பிரபலங்களுடன் இணைந்து போட்டோ எடுத்திருக்கிறார். அப்போது பெரிய நடிகர்கள் கூட ரொம்பவும் கண்ணியமாக இருந்திருக்கின்றனர். ஆனால் நாங்களும் செலிபிரிட்டி தான் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் நடிகையிடம் எல்லை மீறி நடந்திருக்கின்றனர்.

Also read: கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சினிமா கேரியர்.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டதால் நடிகர் படும்பாடு

எப்படி என்றால் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று நடிகையின் அந்தரங்க இடத்தை தொடுவது போன்ற கேவலமான வேலைகளை அவர்கள் செய்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நடிகை எதிர்பாராத நேரத்தில் அவரை தூக்கி சுத்துவது போன்ற மோசமான செயல்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி ஒரு விஷயத்தால் தான் அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று வெறுத்துப் போய் இருக்கிறார்.

தற்போது பலரும் நடிகை எங்கிருக்கிறார் என்று தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனாலும் நடிகை சாதாரண வாழ்க்கையே போதும், லைம் லைட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது என கூறி வருகிறாராம். துருதுருவென நடித்து வந்த நடிகை இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Also read: டிரான்ஸ்பரன்ட் உடையில் திக்கு முக்காட வைத்த மாளவிகா மோகனன்.. இப்படி ஒரு பட ப்ரமோஷனா.!

Trending News