புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்ச்சை நடிகைக்கு கூடிய மவுசு.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அம்மணி

Gossip: சமீபத்தில் வெளிவந்த ஹண்ட்ஸம் நடிகரின் படம் மிகுந்த சர்ச்சைக்கு ஆளானது. வன்முறை ஒரு பக்கம் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் வசனங்களும் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.

இதில் ஹீரோயினாக நடித்த கிரஷ் நடிகையும் ரொம்பவே தாராளம் காட்டி இருந்தார். ஆனால் அவரையே ஓரம் போ என ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்தார் அந்த நடிகை. அதற்கு தற்போது நல்ல பலனும் கிடைத்தது.

ஏற்கனவே அந்த படத்தில் அவருடைய பர்பாமென்ஸ் பார்த்து ஒட்டு மொத்த பாலிவுட் தயாரிப்பாளர்களும் அவரை கமிட் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனாலேயே நடிகை இப்போது பிழைத்துக் கொண்டால் தான் உண்டு என தன் சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

நடிகையின் புது அவதாரம்

இந்த சர்ச்சை படத்திற்காக சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கி இருந்த அவர் அடுத்த படத்தில் இரு மடங்காக கல்லாகாட்டினார். அந்த படமும் மிகப்பெரிய அளவில் அவருக்கு புகழை தேடி கொடுத்தது.

அதை அடுத்து இப்போது அவர் தயாரிப்பாளர்களிடம் 10 விரலை காட்டுகிறாராம். இதுதான் இப்போது பாலிவுட்டில் ஒரே பேச்சாளர் இருக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார். ஆனால் சம்பளத்தை குறைக்க மாட்டேன் எனவும் ஒரே போடாக போட்டு விட்டாராம் அம்மணி.

இருந்தாலும் தயாரிப்பாளர்கள் கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை கமிட் பண்ண தயாராகி வருகின்றனர். இதனால் தற்போது அடுத்தடுத்த படம்களில் நடிப்பதற்கும் நடிகை தயாராகி வருகிறாராம். இப்படி ஒரே படத்தால் நடிகைக்கு வந்த மவுசு பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக இருக்கிறது.

ஒரே படத்தால் கஜானாவை நிரப்பும் நடிகை

Trending News