நெல்லை, சங்கரன் கோயிலைச் சேர்ந்தவர் நடிகை புவனேஷ்வரி. சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். தொடர்து வாய்ப்புகள் தேடி வந்தார்.
விஜயின் பிரியமானவளே, ரிஷி உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை புவனேஷ்வரி. ஷங்கரின் பாய்ஸ் பட த்தில் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின், பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதுவும் கைக்கொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து சீரியலுக்குச் சென்றார் அவர். அங்கு சித்தி, ராஜ ராஜேஷ்வரி, தெக்கத்தி பொண்ணு, ஒரு கை ஓசை, சந்திரலேகா தொடர்களில் நடித்தார்.
ஏழைகளுக்கு உதவி செய்து வரும் புவனேஷ்வரி – பயில்வான் ரங்கநாதன்
’’சினிமாவிலும், டிவியிலும் பிஸியாக வலம் வந்த இவர் மீது அந்தரங்க வழக்கு தொடரப்பட்டது. தான் அந்த தவறில் ஈடுபடவில்லை என கூறி அவ்வழக்கை எதிர்கொண்டார்.
இந்த வழக்கு 3 வருடம் நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கின் அவர் நிருபராதி என தீர்ப்பு வெளியானது. இப்போது சினிமாவில் இருந்து அவர் விலகியிருக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தில், 3, 4 ஷூட்டிங் பங்களாக்கள் கட்டிவிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். ஆனாலும் துறவி மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வளசரவாக்கம் சிவன் கோயிலில், தினமும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது, 10 ஆயிரம் ஏழைகளுக்கு வேட்டி, சேலை தந்து உதவுகிறார்’’ என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.