ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா.. 20 படங்களை இழந்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டவரை ஓடவிட்ட நடிகை

இப்போதெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுப்பு தெரிவித்தால் வாய்ப்புகள் பறிபோகும் நிலை அதிகமாக இருக்கிறது. அப்படி 20 படங்களுக்கு மேல் இழந்து இருக்கிறார் ஒரு நடிகை. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அந்த நடிகை பிறகு முழு நேர கவர்ச்சி நடிகையாக மாறினார்.

பல காமெடி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த அந்த நடிகை சில காலங்களுக்கு முன்பு மிகப்பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். அதாவது பிரபல இயக்குனரின் நண்பர் தன்னை தவறாக அனுப்பியதாக கூறிய நடிகை அந்த விஷயத்தை பெரும் பரபரப்பாக்கினார். ஆனால் அதன் பிறகு நடிகைக்கு வாய்ப்புகள் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

தற்போது கிடைத்த வேடங்களில் நடித்து வரும் நடிகை சின்னத்திரை பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். ஒருமுறை நடிகையைத் தேடி ஒரு நல்ல பட வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று இயக்குனர் கேட்டிருக்கிறார். இதனால் கொதித்துப்போன அந்த நடிகை சம்பந்தப்பட்ட வரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.

Also read: தவறான உறவில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அங்காடி தெரு அஞ்சலி

அதனால் அவருக்கு அந்த பட வாய்ப்பு நழுவி போயிருக்கிறது. அதன் பிறகும் ஒரு பெரிய நடிகரின் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று இயக்குனர் கேட்டதால் கடுப்பான நடிகை உங்கள் வீட்டில் எல்லாம் பொண்ணுங்களே கிடையாதா என்று கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன அந்த இயக்குனர் விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடி விட்டாராம். இப்படி நடிகைக்கு வரும் அனைத்து வாய்ப்புகளும் கைநழுவி போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் மனம் உடைந்து போன நடிகை சின்னத்திரையிலாவது சம்பாதிக்கலாம் என்று இப்போது சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அரிதிலும் அரிதாக அவருக்கு வரும் வாய்ப்புகள் எல்லாம் பலான படம் ரேஞ்சுக்கு இருப்பதால் தற்போது பெரிய திரையே வேண்டாம் என்று அவர் ஒதுங்கி விட்டாராம்.

Also read: கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்ட 42 வயது நடிகை.. பக்கவிளைவால் கனவாகிப்போன திருமணம்

Trending News