வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜோதிகாவால் மொத்த காசையும் இழந்த நடிகை.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஹீரோயின்

ஜோதிகா ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு படங்களில் நடித்து வந்தவர். இப்போது நயன்தாரா போல் அந்த காலகட்டத்தில் ஜோதிகாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அவருடன் ஜோடி போட்டு நடிக்க நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்போது மலையாள படம் ஒன்றில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகாவால் பிரபல நடிகை ஒருவர் கடனாளி ஆகியுள்ளார்.

Also Read : ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல

அதாவது ஜோதிகா போலவே அந்த காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த மற்றொரு நடிகை ரம்பா. டாப் நடிகர்களுடன் நடித்த ரம்பாவுக்கு படத்தை தயாரிக்க ஆசை வந்துள்ளது. தான் சம்பாதித்த மொத்த காசையும் மட்டுமல்லாமல் பைனான்சியரிடமும் கடன் வாங்கி 3 ரோசஸ் என்ற படத்தை எடுத்தார்.

இந்த படத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா போன்ற மூன்று நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இந்த படம் எடுக்கவே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து விட்டதாம். காரணம் என்னவென்றால் ஜோதிகா மற்றும் லைலா இடையே படப்பிடிப்பு தளத்தில் பெரிய சண்டை வந்துவிட்டதாம்.

Also Read : முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 5 ஜோடிகள்.. நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூர்யா-ஜோதிகா

ஜோதிகா படப்பிடிப்புக்கு வராமல் நிறைய நாள் இழுத்தடித்து உள்ளார். லைலாவும் அதே போல் செய்ததால் சூட்டிங் தாமதமாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கும் அதிக செலவு ஆகி உள்ளது. ரம்பா இந்த பிரச்சனையை முடித்து ஒரு வழியாக 3 ரோசஸ் படத்தை எடுத்து முடித்தார். ஆனால் படம் எதிர்பார்க்காத அளவு தோல்வியை தழுவியது.

இதனால் சம்பாதித்த காசு போனது மட்டுமல்லாமல் கடனாளியாக ரம்பா மாறினார். அரசனை நம்பி புருஷனை கைவிடுவது போல, தயாரிப்பாளராக சாதிக்கலாம் என நடிப்பை ஒதுக்கி வைக்க நினைத்தார். ஆனால் மொத்தமாக அவரது வாழ்க்கையை 3 ரோசஸ் படம் புரட்டி போட்டது. அதன் பிறகு கடனை அடைக்க ரம்பா படாத பாடுபட்டாராம்.

Also Read : நட்பை வைத்து நாங்களும் கெத்து தான் என நிரூபித்த 5 படங்கள்.. தோழிக்காக கொல கேசில் சிக்கிய ஜோதிகா

Trending News