வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவுண்டமணியால் அனைத்தையும் தொலைத்த நடிகை.. இன்று வரை வாய்ப்பு கிடைக்காத அவலம்.!

கவுண்டமணி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காலத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் கால்ஷீட் கூட சுலபமாக கிடைத்து விடுமாம். கவுண்டமணியின் கால்ஷீட் வாங்குவது குதிரைக்கொம்பாக இருந்துள்ளது. இவ்வாறு அந்த ஆண்டு வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் கவுண்டமணி தான் நடித்திருப்பார்.

இந்நிலையில் சாதாரணமாக ஹீரோக்களே நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக அவ்வப்போது செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியும் சில சர்ச்சையில் சிக்கி உள்ளதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

Also Read : கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு.. ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம்

அதாவது நடன நடிகையாக அறிமுகமான ஷர்மிலியுடன் கவுண்டமணி தொடர்பில் இருந்ததாக பயில்வான் குற்றம் சாட்டி உள்ளார். அதுமட்டுமின்றி ஷர்மிளாவுக்கு சொந்தமாக ஒரு வீட்டை கவுண்டமணி வாங்கி தந்துள்ளாராம். ஆவாரம் பூ படத்தில் பயில்வானுக்கு ஜோடியாக ஷர்மிலி நடித்திருந்தாராம்.

அப்போது ஷர்மிலியை தூக்கி சுற்றும் ஒரு காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அதை டப்பிங்கில் கவுண்டமணி பார்த்துவிட்டு நீ எப்படி அவளை தூக்கி சுற்றலாம் என ஷர்மிலி முன்னிலையில் பயில்வனை கண்டபடி திட்டி விட்டாராம். இதனாலேயே ஷர்மிலிக்கு ஜோடியாக நடிப்பதை பயில்வான் விட்டுவிட்டாராம்.

Also Read : யாராக இருந்தாலும் அசிங்கப்படுத்தும் கவுண்டமணி.. படப்பிடிப்பில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட இயக்குனர்.!

கவுண்டமணி தான் ஷர்மிலிவுக்கு நிறைய பட வாய்ப்பு கொடுத்து வந்தாராம். ஒரு கட்டத்தில் மேல் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருவதால் மற்ற படத்தின் வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டது. இதனால் ஷர்மிலி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஷர்மிலி உடல் பருமன் அதிகமானதால் அவருக்கு இன்று வரை பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இவை அனைத்திற்கும் முழு காரணம் கவுண்டமணி தான் என்ற பயில்வான் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

Also Read : ரஜினி, கவுண்டமணி கூட்டணியில் செம்ம லூட்டி அடித்த 6 படங்கள்.. பத்த வச்சுட்டியே பரட்ட!

Trending News