புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கைவிட்ட கணவன், கண் வைத்த அரசியல்வாதி.. மரண படுக்கையில் நடிகை அனுபவித்த துயரம்

Gossip: அவங்களுக்கு என்னப்பா பெரிய ஹீரோயின். காசு கொட்டி கிடக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல். இதுதான் நடிகைகளை பற்றிய மக்களின் எண்ணமாக இருக்கும்.

ஆனால் திரைக்கு முன்னால் ஜொலிக்கும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு நிம்மதியாக இருக்காது. பல நடிகைகள் இந்த விஷயத்திற்கு பொருந்தி போவார்கள். அப்படித்தான் புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த நடிகை இறுதி காலத்தில் படாத பாடுபட்டார்.

அழகும் திறமையும் கொண்ட அந்த நடிகை மூத்த நடிகர் ஒருவரின் மேல் காதலில் விழுந்தது தான் அவருடைய கஷ்டத்திற்கு காரணம். மூன்றாவது மனைவியாக இருந்தாலும் கூட நடிகை அதை சந்தோஷமாகத்தான் ஏற்றுக்கொண்டார்.

சோகம் நிறைந்த நடிகையின் இறுதி காலம்

ஆனால் விதி யாரை விட்டது கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு அவரை தனிமையில் தள்ளியது. இதற்காகவே காத்திருந்த அரசியல் புள்ளி ஒருவர் அவரை தவறாக அணுகியிருக்கிறார். ஆனால் நடிகை அதற்கு மசியவில்லை.

இதனால் நடிகைக்கு பல குடைச்சலை கொடுத்திருக்கிறார் அந்த பிரபலம். அதை சமாளிக்க முடியாமல் கணவரின் ஆதரவும் இல்லாமல் தவித்த நடிகை ஒரு கட்டத்தில் கடன் சுமைக்கு ஆளானார்.

கையில் இருந்த அத்தனை சொத்துக்களும் பறிபோன நிலையில் கடைசி காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார் நடிகை. அதுவே அவருடைய உயிரை குடித்து விட்டது.

தவறான பழக்கத்திற்கு அடிமையான அவர் சுயநினைவு இன்றி உயிர் நீத்தார். இப்போதும் அவருடைய இறுதி காலகட்டம் பலருக்கும் புதிர் தான். இருப்பினும் அவருக்கு நெருக்கமானவர்கள் நடிகை அந்த பெரும்புள்ளியால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி வருகின்றனர்.

Trending News