வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அஜித்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை.. இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

Actor Ajith: அஜித்துடன் நடித்ததால் மார்க்கெட்டை இழந்து விட்டேன் என்று வெளிப்படையாகவே ஒரு நடிகை சொல்லி இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதாவது உச்ச நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் உடன் வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் சமீபகாலமாக அஜித்தின் படங்களில் பாலிவுட் நடிகைகள் தான் நடித்து வருகிறார்கள். மேலும் அஜித்துடன் நடித்த பிறகு மிகப்பெரிய உயரத்தை அடைந்த நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு நடிகையின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதாம்.

Also Read : விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!

அதாவது சினிமாவில் வந்த குறுகிய காலத்திலேயே பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாவனா. இவர் தமிழ் சினிமாவின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தான் அஜித்தின் அசல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரை நாடி வந்துள்ளது. அஜித் படம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.

உடனே பாவனாவும் அசல் படத்தில் நடிக்க சம்மதித்து நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் பாவனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்துள்ளது. ஆனால் அசல் படத்தில் நடித்ததன் காரணமாக இவரால் வேறுபடத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் தன்னை தேடி வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நிராகரித்து விட்டார்.

Also Read : கடைசியில் அஜித்துக்கு வந்த சீரியஸ்னஸ்.. சிறுத்தை சிவா கூட்டணிக்கு பின் 3 பெரிய திமிங்கலத்துக்கு பொறி வைக்கும் AK

கண்டிப்பாக அசல் படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் பாவனா இருப்பார் என எதிர்பார்த்தார். ஆனால் இப்படம் வெளியாகி பாவனாவின் சினிமா கேரியரே தலைகீழாக மாறியது. அவரை தேடி பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு எதுவுமே வரவில்லை. அதுமட்டுமின்றி அசல் படத்தில் நடிக்கும் போது பாவனா நிராகரித்த பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

அதன் பிறகு இதை நினைத்து பாவனா வருத்தப்பட்டதும் உண்டா. ஆனால் இதில் ஒரே ஒரு மனதிருப்தி என்றால் அஜித்துடன் தான் சேர்ந்து நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என பாவனா பகிர்ந்து இருக்கிறார். அதுமட்டுமின்றி அஜித் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதையும் கூறியிருக்கிறார்.

Also Read : விஜய்யின் அரசியலை குறிவைத்து தட்டித் தூக்க நினைக்கும் அஜித்.. அடுக்கடுக்காக போட்டு இருக்கும் மாஸ்டர் பிளான்

Trending News