திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கால் வச்ச இடமெல்லாம் விளங்காம போச்சு.. டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டும் பறிபோன பட வாய்ப்பு

ஆரம்பத்தில் நடிகை வந்த புதிதில் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கொண்டு கொட்டியது. ஏனென்றால் சினிமாவில் வந்த புதிதிலேயே பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு நடிகையைத் தேடி வர தொடங்கியது. அதுவும் டாப் நடிகர்கள் எல்லோரும் இவரை தேர்ந்தெடுத்ததால் மற்ற நடிகைகளுக்கு இவர் மீது பொறாமை வரத் தொடங்கியது.

மேலும் கஷ்டப்படாமல் நம்மை நாடி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகிறதே என்று நடிகை மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார். ஆனால் இது சில காலம் கூட நீடிக்கவில்லை. ஏனென்றால் இவர் ஒரு ராசியில்லாத நடிகை என்று சினிமா துறையினரால் முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

ஏனென்றால் டாப் நடிகர்களின் படங்கள் எப்படி இருந்தாலும் அவரது ரசிகர்கள் வெற்றியடைய செய்து விடுவார்கள். ஆனால் அம்மணி ஹீரோயினாக நடித்த படங்கள் அத்தனையுமே தொடர்ந்து ஃபெயிலியர் ஆகிவிட்டது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நடிகரின் படம் கூட படுதோல்வியை சந்தித்தது.

இவருடைய ராசி பெரிய நடிகரையே இப்படி பாதித்தால் அதற்கு கீழே உள்ள நடிகர்கள் பயந்து இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டார்கள். அதனால் இப்போது நடிகையை தேடி எந்த இயக்குனரும் கதை சொல்ல வருவது இல்லையாம். இதனால் நடிகை மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

அதன் பிறகு இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக தற்போது வேறு வழியில்லாமல் ஊர் ஊராக சுற்றி வருகிறாராம். அவரது படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் நடிகை ஊர் ஊராக சென்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மனதை தேற்றி வருகிறார்.

Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி

Trending News