சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பல பேரை காதலிச்சு ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை.. போற போக்கில் உண்மையை போட்டு உடைத்த கேவலம்

Kisukisu: அழகை மட்டும் வச்சு யாரையும் எடை போடக்கூடாது என்று சும்மாவா சொன்னாங்க. வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு அழகாக க்யூட்டாக இருக்கும் ஒரு நடிகை அவருடைய கேரக்டரை பற்றி அவரே போற போக்குல போட்டு உடைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள இந்த நடிகை தமிழில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் ஒரு சில படங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்.

அதன் பின் மலையாள படங்களில் எப்படியாவது நடித்து பிரபலமாகிவிட வேண்டும் என்று அந்த பக்கம் போய் விட்டார். ஆனாலும் அங்கேயும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகாமல் போய்விட்டார். அதன் பின்பு ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அந்த சமயத்தில் இவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இவர் நடித்த படம் ஒன்று தற்போது வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இந்த நடிகை கூச்ச நாச்சமே இல்லாமல் நான் பல பேரை காதலித்து இருக்கிறேன். ஏகப்பட்டவருடன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கையான எந்த ஒரு நபரும் செட்டாகவில்லை.

Also read: தயாரிப்பாளரை வளைத்து போட்ட நடிகை.. பணத்துக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்

அத்துடன் காதலிக்கும்போதும் சரி ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பொழுதும் சரி எனக்கு ஓவராக டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள். அந்த டார்ச்சர் என்னால் தாங்கிக் கொள்ள முடியாததால் எல்லாத்தையும் விட்டு விட்டேன் என்று கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இளம் வயதில் ஒருவரை மனதார காதலித்தேன். அவரே பார்ப்பதற்காகவே அந்த இடத்திற்கு சும்மா சும்மா போயி அவரை சைட் அடித்தேன்.

ஆனாலும் அது பருவ காதல் ஆகவே முடிந்து விட்டது. பிறகு நான் காதலித்த யாரும் எனக்கு உண்மையானவராக இல்லை. அதனால அவர்களை வெறுத்துப் போய் ஒதுக்கி விட்டேன். ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை விட்டு நிரந்தரமாக விலகி வருவதே நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய சந்தோசம் என்று அனைவரது முன்னாடியும் இவருடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இதை எல்லாம் கேட்ட ரசிகர்கள் எல்லாமே சரி ஆனால் பல பேர் கூட ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்று சொல்வதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அந்த நடிகை பேசிய மட்டமான அனுபவத்தை பலரும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Also read: இரவு பகலாக நடிகையை டார்ச்சர் செய்த இயக்குனர்.. 15 கோடியை தூக்கிக் கொடுத்ததால், கிளாமரை தூக்கலா காட்டிய ஹீரோயின் 

Trending News