சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

உடல்நிலையால் நடிகை சந்திக்கும் பிரச்சனை.. தொடர்ந்து கைநழுவும் வாய்ப்புகள்

Gossip: விவாகரத்து நடிகை உடல்நல பிரச்சனையால் தவித்து வருகிறார். இதனால் நடிப்பை கூட ஓரங்கட்டி விட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

ஆனால் இப்படியே இருந்தால் மொத்தமாக இன்டஸ்ட்ரியை விட்டு செல்ல வேண்டியது தான். இதை புரிந்து கொண்டார் நடிகையும் சமீபத்தில் ஒரு ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகி நடித்தார்.

அதை அடுத்து நடிகைக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. ஆனால் முன்பு போல் அவரால் பல மணி நேரம் கேமரா லைட் முன்பு நிற்க முடியவில்லை.

பொது நிகழ்ச்சியில் கூட நடிகை வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்ணாடி அணிந்து கொண்டு தான் வருவார். அதே போல் நீண்ட நேரம் மேக்கப் போடுவதும் சிரமமாக இருக்கிறதாம்.

தொடர்ந்து கைநழுவும் வாய்ப்புகள்

இதனால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் நடிப்பேன் என இயக்குனர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அது செட்டாகாது என தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டார்களாம்.

சரியாக நடித்து விடுவேன் என நடிகை சொல்லியும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் கைக்கு வந்த வாய்ப்பு கூட தற்போது கைநழுவி போயிருக்கிறது.

இருந்தாலும் சில சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஐடியாவில் நடிகை இருக்கிறாராம். அதற்கான வேலையை தொடங்கியுள்ள அவர் மீண்டும் புது தெம்புடன் வருவார் என கூறுகின்றனர்.

Trending News