சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

புரட்சித்தலைவருடன் 28 படங்கள் ஜோடி போட்ட நடிகை.. சலிக்காமல் ஹிட் கொடுத்த கூட்டணி

MGR : பொதுவாக இப்போது உள்ள ஹீரோக்கள் ஒரு ஹீரோயின் உடன் இரண்டு படங்களுக்கு மேல் ஜோடி போடுவதை நிறுத்தி விடுகிறார்கள். ஏனென்றால் அதற்கு மேல் ஒன்றாக நடித்தால் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விடுகிறது. மேலும் புதிய நடிகைகளின் வரவு அதிகமாக உள்ளதால் டாப் ஹீரோக்கள் அவர்களுடன் ஜோடி போட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அந்த காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரே நடிகையுடன் கிட்டத்தட்ட 28 படங்கள் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வெள்ளி விழா கண்டுள்ளது. அதாவது எம்ஜிஆருக்கு பின் அவரது கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா தான் அவருடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

அதில் ஆயிரத்தில் ஒருவன், சந்திரோதயம், தாய்க்கு தலைமகன், காவல்காரன், குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், ஒளி விளக்கு, அடிமைப்பெண், நம் நாடு, ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், என் அண்ணன், குமரிக்கோட்டம் போன்ற பல படங்கள் அடங்கும்.

Also Read : எம்ஜிஆர் உடன் அதிகமாக ஜோடி போட்ட 5 நடிகைகள்.. சொத்துக்களையும் நகைகளையும் அள்ளிய ரெண்டு ஆசை நாயகி

மேலும் எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா 28 படங்களில் நடித்த நிலையில் 16 படங்கள் ஹிட் கொடுத்திருந்தார். அதோடு எம்ஜிஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா சில காலம் படங்களில் நடித்து வந்த நிலையில் அதன் பின்பு அவரும் அரசியலில் நுழைந்துவிட்டார்.

எம்ஜிஆர் இறந்தபோது பல அவமானங்களை ஜெயலலிதா சந்தித்திருந்தார். அதன் பிறகு கட்சி மற்றும் தொண்டர்களுக்காக எம்ஜிஆரின் அதிமுக கட்சியை அதன் பிறகு ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வந்தார். அதுவும் தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா வகித்திருந்தார்.

Also Read : திரிஷாவை போல் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை.. சேலம் பிரபலத்துக்கு எம்ஜிஆர் கொடுத்த விசேஷ விருந்து

Trending News