ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கல்யாணம் ஆனா மார்க்கெட் போயிடுமா.. நம்பர் நடிகையை பார்த்து களத்தில் குதித்த ஹீரோயின்

Gossip: திருமணம் ஆகிவிட்டால் அக்கா அண்ணி அம்மா கேரக்டர்களுக்கு தான் நடிகைகள் சரிப்பட்டு வருவார்கள் என்பதெல்லாம் அந்த காலம். இப்போது திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக பல நடிகைகள் கலக்கி கொண்டிருக்கின்றனர்.

அதில் சமத்து நடிகை திருமணத்திற்கு பிறகு தான் எடாகூடமான கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்போது அவர் விவாகரத்து பெற்று சுதந்திர பறவையாக மாறிய நிலையில் தடையில்லாமல் நடித்து வருகிறார்.

அதேபோல் நம்பர் நடிகை திருமணத்திற்கு பிறகு சில சறுக்கல்களை சந்தித்தார். ஆனால் இப்போது அவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. அதிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தான் அவர் அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் பிஸியான நடிகை

இதையெல்லாம் பார்த்த பப்ளி நடிகை ஒருவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஆரம்பத்தில் புசுபுசுவென இருந்த நடிகை நம்பர் நடிகையை பார்த்து வெயிட்டை குறைத்தார்.

ஆனால் அவருக்கு இந்த முயற்சி ஒர்க் அவுட் ஆகவில்லை. நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகாததால் மார்க்கெட் குறைந்தது. இதனால் வேறு வழி இல்லாமல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதன் பிறகு ஒரு பிரேக் எடுத்த நடிகை சில படங்களில் நடித்தார். அது எதுவும் கை கொடுக்கவில்லை. இருப்பினும் தற்போது கதையின் நாயகியாக அவர் மூன்று படங்களில் சத்தம் இல்லாமல் நடித்து முடித்து விட்டாராம்.

இந்தப் படங்கள் மட்டும் வெளிவந்தால் நம்பர் நடிகையையே ஓரங்கட்டி விடுவேன் என அவர் பந்தாவாக கூறி வருகிறாராம். பார்ப்போம் இது அவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா அல்லது அவரையே ஓரம் கட்டுமா என.

Trending News