Prashanth Actress: 90ஸ் காலத்தில் டாப் ஸ்டார் ஆக ஜொலித்த பிரசாந்த் படங்களில் ஜோடியாக எந்த ஹீரோயின் நடித்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக பிரசாந்தின் படங்கள் இருக்கும். அதன் மூலம் நடிகைகளும் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று பிரபலமாகி விடுவார்கள். ஆனால் தொடர்ந்து பிரசாந்த் அந்த எடுத்து தக்க வைத்துக் கொள்ள முடியாததால் தட்டு தடுமாறி அவ்வப்போது ஒரு படங்களை கொடுத்து வந்தார்.
அந்த சமயத்தில் பிரசாந்த் நடிப்பில் கலையான விமர்சனங்களை பெற்ற படம் ஜாம்பவான். இப்படத்தை ஏ எம் நந்தகுமார் என்பவர் இயக்கி இருக்கிறார். இதில் இவருடன் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமான மீரா சோப்ரா என்கிற நிலா அறிமுகமானார். அறிமுகமான இப்படம் ஹிட்டான நிலையில் அடுத்து தமிழில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
கோபப்பட்டு சூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பிய நடிகை
அதன் மூலம் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி, போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் இவர் நடித்த எந்த படமும் சரியாக ரீச் ஆகவில்லை. இந்த சமயத்தில் பிரசாந்துடன் நடித்த ஜாம்பவான் படத்தில் ஓவர் ஆர்ப்பாட்டம் பண்ணி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களை அல்லல் படுத்திருக்கிறார். அதாவது இப்படத்தின் படப்பிடிப்புக்காக மொத்த டீமும் குற்றாலத்திற்கு போயிருக்கிறார்கள்.
அங்கே குற்றால அருவியில் குளிக்கும் படியாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக டேங்க் ஒன்றில் தண்ணீர் நிரப்பி அதில் மீரா சோப்ராவை குளிக்க வைப்பதற்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ அந்த தண்ணியை பார்த்த பிறகு இந்த தண்ணீரில் எல்லாம் என்னால் குளிக்க முடியாது. எனக்கு குளிப்பதற்கு மினரல் வாட்டர் தான் வேணும் என்று கேட்டு அடம் பிடித்து இருக்கிறார்.
இப்படி இவர் தொல்லை படுத்தியதால் என்ன செய்வது என்று தெரியாத இயக்குனர் உச்சகட்ட கடுப்பில் தயாரிப்பாளரிடம் இந்த நடிகை கேட்ட விஷயத்தை சொல்லி இருக்கிறார். அந்தத் தயாரிப்பாளர் என்னது குளிப்பதற்கு மினரல் வாட்டரா என்று ஆவேசப்பட்டு இருக்கிறார். ஏனென்றால் அந்த டேங்க் கிட்டத்தட்ட 12 ஆயிரம் லிட்டர் பிடிக்கும். அப்படி என்றால் அதை மினரல் வாட்டரால் நிரப்ப வேண்டும் என்றால் எப்படி சாத்தியமாகும் என்பதை நினைத்துக் கோபப்பட்டு இருக்கிறார்.
உடனே இயக்குனரிடம் முடியாது என்று சொல்லிய பட்சத்தில் இந்த விஷயம் நடிகை மீரா சோப்ரா காதிற்கு போய் இருக்கிறது. அப்படி என்றால் இந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி சூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பி போய் இருக்கிறார். இதனால் இது என்னடா வம்பா போச்சு நமக்கே இந்த படம் ஹிட் ஆகுமா இல்லையா என்று மிகப்பெரிய தலைவலியில் போய்க் கொண்டிருக்கிறது.
இதுல வேற இந்த நடிகை ஓவர் ஆர்ப்பாட்டம் பண்ணி இப்படி சோதிக்கிறார் என்று பிரசாந்த் புலம்பியதாக இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மீரா சோப்ரா பண்ண ஆர்ப்பாட்டத்தை சொல்லி புலம்பி இருக்கிறார்.
ரீ என்ட்ரி கொடுத்த பிரசாந்த்
- 5 வருடங்களுக்குப் பிறகு டாப் ஸ்டாரின் ஹீரோ அவதாரம்
- கோட் பட ராசியால் வந்த விடிவுகாலம்
- அப்பவே விதை போட்டு ஆலமரம் போல் வளர்ந்த பிரசாந்த்