ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

அந்த மாதிரி நெனப்போட வராதீங்க.. ஐட்டம் நடிகைக்கு வந்த திடீர் ஞானோதயம்

Gossip: புதுப்புது நடிகைகளின் வரவால் இப்போது திரையுலகில் போட்டி அதிகரித்து வருகிறது. அதனாலயே குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகைகள் கூட இப்போது கவர்ச்சி புயலாக மாறி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர்.

அப்படித்தான் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் அடக்கமாக நடித்த நடிகை அடுத்தடுத்த படத்தில் முற்றும் துறந்து தரிசனம் கொடுத்தார். இதனால் அவர் வீட்டு வாசலை தேடி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் குவிய ஆரம்பித்தனர்.

அதிலும் நடிகை அந்த கட்டுமஸ்தான நடிகருடன் அடுத்தடுத்த படங்களில் ரொம்பவும் கிளாமராக நடித்தது ஒரு மாதிரி கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை கிடைத்த கிளாமர் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார்.

மனம் திருந்திய நடிகை

இதன் மூலம் அம்மணியின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. ஒரு கட்டத்தில் மூத்த நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை டாப் ஹீரோக்களுடனும் நடிக்க ஆரம்பித்தார். ஒரு பாடலுக்கு ஆடுவது இரண்டாவது ஹீரோயின் என டாப் கியரில் சென்று கொண்டிருந்தார்.

அதன் பிறகு வாய்ப்புகள் கொஞ்சம் குறையவே சின்னத்திரையின் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதில் அவர் சங்கடப்படும் படியான பல நிகழ்வுகள் நடந்தது. அதை தொடர்ந்து நடிப்பும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தற்போது குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நடிகையை தேடி அதேபோல் கிளாமர் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மாதிரி எண்ணத்தோட யாரும் வராதீங்க.

கோடி கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் நான் அப்படி நடிக்க மாட்டேன் என நடிகை கண்டிஷனாக சொல்லி இருக்கிறார். திடீரென அவருக்கு வந்த இந்த ஞானோதயம் பற்றி தான் கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

ஐட்டம் நடிகை போடும் கண்டிஷன்

Trending News