90களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தற்போது சினிமாவை வெறுத்து ஒதுக்கிவிட்டு ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல நடிகர் ஒருவர் இருப்பது பகீர் கிளப்பி இருக்கிறது. திரையுலகில் அந்த காலம் தொட்டே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் இருந்து வருகிறது.
இதற்கு எந்த நடிகையும் விதிவிலக்கல்ல. அதேபோன்று இந்த நடிகையும் கட்டுமஸ்தான அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறார். சில காலங்கள் நடிகருடன் உறவில் இருந்த அந்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பிறகு அவர் சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டார்.
Also read: வேட்டையாடிய பின் நடிகைகளை கழட்டிவிட்ட நடிகர்.. இப்ப மகளின் வாழ்க்கையில் திருப்பி அடிக்கும் கர்மா
இதற்கு முக்கிய காரணம் நடிகரின் அந்தரங்க டார்ச்சர் தான். அதை தாங்க முடியாமல் தவித்து வந்த நடிகை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் அதிலும் அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கணவரை பிரிந்த அந்த நடிகை நிம்மதியைத் தேடி ஒரு சாமியாரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் நடிகைக்கு ஆறுதல் கூறி மன அமைதி கொடுத்த அந்த சாமியார் கொஞ்சம் கொஞ்சமாக அவரை தன் கட்டுப்பாட்டில் வைக்க ஆரம்பித்தார். இந்த விஷயம் ஒரு நாள் மீடியாவில் ஆதாரத்தோடு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அந்த நடிகை இப்போது முழு நேர ஆன்மீகவாதியாகிவிட்டார்.
இது பற்றி யாராவது அவரிடம் கேட்டால் அந்த நடிகரால் நான் படாத பாடுபட்டேன். அதிலிருந்து இந்த சாமியார் தான் எனக்கு விமோச்சனம் கொடுத்தார் என்று கூறுகிறார். இப்போது அந்த சாமியார் உடல்நல குறைவாக இருக்கிறார். அவருக்கு பதில் மொத்த பொறுப்பையும் ஏற்றுள்ள அந்த நடிகை சாமியாரின் இடத்தில் ஒரு மகாராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.