வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரெண்டு பிள்ளைக்கு அம்மாவா நடிக்க முடியாது என தெறித்து ஓடிய நடிகை.. அரவிந்த்சாமிக்கு இந்த நிலைமையா?

Actor Aravindswamy: முதல் படத்திலேயே பெரிய பிரபலங்களின் அறிமுகத்தால், நடிக்கும் வாய்ப்பினை பெற்றவர் அரவிந்த்சாமி. இந்நிலையில் படத்தில் இவருக்கு ஏற்பட்ட நிலைமை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

பன்முகத் திறமை கொண்ட இவர் 90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக ஏற்ற படங்கள் மாபெரும் வெற்றியை தந்தது. அவ்வாறு தன் முதல் படமான தளபதியில் பல பிரபலங்களோடு இணையும் வாய்ப்பை பெற்றார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இவருக்கு அடுத்த கட்ட வாய்ப்புகளை கொடுத்தார்.

Also Read: ஆணவத்தில் ஆடியதால் திருப்பி செய்த கர்மா.. தன்னந்தனியாக தத்தளித்து வரும் சூர்யா பட இயக்குனர்

அவ்வாறு அடுத்தடுத்து ரோஜா, பாம்பே போன்ற படங்களில் கமிட் ஆகினார் அரவிந்த்சாமி. ரோஜா படமும் இருக்கு மாபெரும் வெற்றி படமாய் அமைந்தது. அதைத்தொடர்ந்து பாம்பே படத்தில் மத கலவரத்தை சந்திக்கும் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

இப்படமும் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹீரோயின் ஆன மனிஷா கொய்ராலா என்னால எல்லாம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடிக்க முடியாது என கூறிவிட்டு தன் ஊருக்கு சென்று விட்டாராம்.

Also Read: கெஞ்சாத குறையாக கெஞ்சி விஜய் பட வாய்ப்பு வாங்கிய நடிகர்.. இதை விட்டால் சினிமாவில் வளர வேற வழியில்லை.!

தான் நடிக்க இருந்த படம் குறித்து அக்கம் பக்கம் கூறியபோது, உனக்கு மணிரத்னம் யார் என்று தெரியாதா அவர் எவ்வளவு பெரிய இயக்குனர் தெரியுமா? இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதெல்லாம் அரிது எனக் கூறியதை கேட்ட பிறகு தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதற்கு இடையே ஹீரோயின் இக்கேரக்டரை ஏற்க மறுத்ததால், படம் ஊற்றி மூடும் நிலைமையில் இருந்ததாம். ஏற்கனவே இப்படத்தில் நடிக்க அரவிந்த்சாமி இடம் கேட்டபோது, ஆரம்பத்தில் மறுத்தாராம். அதன்பின் நீ இந்த கேரக்டரில் நடித்தால் நல்லா இருக்கும் என மணிரத்னம் ஒப்புதல் கூறிய பிறகு, நீங்க சொன்னா எனக்கு ஓகே தான் என நடிக்க ஒப்புக்கொண்டாராம் அரவிந்த்சாமி. அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்படம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

Also Read: ரெட் கார்ட்டுக்கு பயந்து இறங்கி வந்த சிம்பு.. சாமர்த்தியமாய் பணிய வைத்த தயாரிப்பாளர்

Trending News