வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த நடிகை.. உண்மை தெரிந்ததால் 2 படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்

Actor Vijayakanth: ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் சமீப காலமாக இவருக்கு உடல் நல பிரச்சனை இருப்பதால் பொதுவெளியில் வருவதையே தவிர்த்து வருகிறார். ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் வட்டம் அப்படியே தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட தங்க மனசுக்காரரான விஜயகாந்த் உடன் இணைந்து நடிப்பதற்கு ஒரு நடிகை மறுத்து இருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என புகழ்பெற்று விளங்கிய நடிகை சௌந்தர்யா விஜயகாந்த் உடன் நடிப்பதற்கு வந்த பட வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

Also read: 53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

பலமுறை இயக்குனர் கேட்டுப் பார்த்தும் மறுத்த சௌந்தர்யா விஜயகாந்த் ரொம்ப கோபக்காரர் என்று கூறுகிறார்கள். அதனால் என்னால் நடிக்க முடியாது என்ற காரணத்தையும் சொல்லி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட கேப்டன் உடனே அவருக்கு போன் செய்து நீங்கள் நினைப்பது போன்று கிடையாது தைரியமாக நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டும் இன்றி நீங்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சில நாட்கள் கவனித்து பாருங்கள். உங்களுக்கு ஓகே என்றால் மட்டும் கால்ஷீட் கொடுங்கள் என்று சமாதானப்படுத்தும் விதமாக பேசி இருக்கிறார். அதன் பிறகு சௌந்தர்யா விஜயகாந்த் உடன் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டாராம்.

Also read: குடும்ப பிரச்சனையா, அரசியல் சதியா.? இரண்டு மாத கருவுடன் உயிர் நீத்த ரஜினி பட ஹீரோயின்

அப்படி இவர்களின் நடிப்பில் உருவான படம் தான் தவசி. அதில் சௌந்தர்யாவின் நடிப்பு வழக்கம் போல அற்புதமாகவே இருந்தது. மேலும் விஜயகாந்துடன் அவருடைய ஜோடி பொருத்தமும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆனது. அது மட்டும் இன்றி அந்த ஒரு படத்திலேயே விஜயகாந்தின் நல்ல குணத்தை அவர் புரிந்து கொண்டாராம்.

அதைத்தொடர்ந்து மீண்டும் சொக்கத்தங்கம் படத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது போது எந்த சாக்கும் சொல்லாமல் உடனே தேதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டாராம். அந்தப் படமும் சௌந்தர்யாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இப்படி விஜயகாந்தை பார்த்து பயந்து நடிக்க மறுத்த இவர் பின்னாளில் அவருக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Also read: விஜயகாந்த் போல் சுதாகரிக்க தெரியாமல் இமேஜை கெடுத்த விஜய் சேதுபதி.. தொடர்ந்து தேடி வரும் வாய்ப்பு

Trending News