செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

20 வயசில் ஜோடி போட மறுத்த நடிகை.. 46 வயதில் கார்த்திக் உடன் இணைந்த கூட்டணி

90 களில் கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர் நவரச நாயகன் கார்த்திக் உடன் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. இவர்கள் இருவரும் ஜோடி போட்டு நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசனை கூட ரசிகர்களுக்கு வந்ததில்லை.

தன்னுடைய 20 வயதில் கார்த்திக் உடன் நடிக்காத அந்த நடிகை தற்போது 46 வயதில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அதாவது கார்த்திக் உடன் அம்பிகா, ராதா, அமலா, நிரோஷா, ரம்பா, நக்மா என்ன பல நடிகைகள் ஜோடி போட்டு நடித்திருக்கின்றனர்.

Also Read : பிரம்மாண்டத்திற்கு ஆசைப்பட்ட கார்த்திக்.. மிஞ்சியது என்னமோ அவமானம் மட்டும் தான்

ஆனால் இடுப்பழகி சிம்ரன் மட்டும் கார்த்திக் உடன் ஒரு படத்தில் கூட ஜோடி போட்டு நடித்ததில்லை. இப்போது சிம்ரனின் 25 வருட சினிமா வாழ்க்கையில் கார்த்திக் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அந்தகன்.

இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் தற்போது சிம்ரன் நடித்து வருகிறார். சமீபகாலமாக சிம்ரன் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Also Read : வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 3 நடிகைகள்.. கடைசியாக தேர்வான இடுப்பழகி சிம்ரன்

வாரணம் ஆயிரம், ராக்கெட்ரி போன்ற படங்களில் சிம்ரன் வயதான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இந்த படத்திலும் பிரசாந்துக்கு அம்மாவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

மேலும் முதல் முறையாக கார்த்திக், சிம்ரன் ஜோடி இணைந்துள்ளதால் இவர்களது கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் அந்தகன் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.

Also Read : வில்லி ரோல் பண்ணி கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. ஆரம்பித்து வைத்த சிம்ரன்

Trending News