செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

உங்க கூட நடிக்க முடியாது, பாக்யராஜையே ஒதுக்கிய நடிகை.. இமேஜ் பார்த்து கழட்டிவிட்டு சம்பவம்

Actor Bhagyaraj: பன்முக திறமை கொண்டு தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கே பாக்யராஜ். அவ்வாறு இருக்க, இமேஜ் பார்த்து இவர் படத்தில் நடிக்க மறுத்த நடிகை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சுவர் இல்லாத சித்திரம் என்னும் படத்தின் மூலம் இயக்கத்தை ஆரம்பித்த இவர் ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற படங்களில் பெரிதும் பேசப்பட்டவர்.

Also Read: அப்படியே கவுண்டமணியின் நக்கல், தெனாவட்டு பிடிச்ச ஒரே நடிகர்.. ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கின்னஸ் நாயகன்

அதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் ஏற்ற எண்ணற்ற படங்கள் இவருக்கு வெற்றியை தந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, முந்தானை முடிச்சு, சின்ன வீடு போன்ற படங்களில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். அவ்வாறு தன் திரை கதையாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.

அதேபோல் தன் நடிப்பாலும், அழகாலும் கேரியரின் உச்சத்தில் இருந்த நடிகை தான் அமலா. அவ்வாறு இருக்க, காவடி சிந்து என்னும் படத்தில் பாக்யராஜ் உடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த இவர் எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை என கூறி படத்தை பாதிலேயே நிறுத்தி விட்டாராம்.

Also Read: திருமணம் ஆன புதுசு, மிருகமாக நடந்து கொண்ட பகத் பாசில்.. நஸ்ரியா கொடுத்த கடைசி வார்னிங்

நல்லா போய் கொண்டு இருந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு, பெரிதாய் போனதால் இப்படத்தை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டார் பாக்யராஜ். இப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்த காட்சிகள் முற்றிலும் முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகளும் முடிவு பெற்றதாம்.

அவ்வாறு படத்தின் பாதி சூட்டிங் முடிந்த பிறகு, இவர்கள் இருவரின் கருத்து வேறுபாடால் இப்படம் ஊத்தி மூடப்பட்டது. அதை தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற பாடலை பட்டினம் தான் போகலாம் என்றும் படத்திற்கு கொடுத்து விட்டார்களாம். தன் அழகால் ரஜினி கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்ற அமலா இமேஜ் பார்த்து, தன் கர்வத்தால் பாக்யராஜ் படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

Also Read: கொள்கையோடு சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்கள்.. நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடித்த டி ஆர்

Trending News