செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்த நடிகை.. முன்னாள் கணவரை வெறுப்பேற்ற செய்த வேலை

Gossip: நான்கு எழுத்து நடிகை இப்போது நடிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இடையில் திருமணம், விவாகரத்து, உடல்நல பிரச்சனை என பல விஷயங்களால் இவர் நொந்து போயிருந்தார்.

அதேபோல் இளம் நடிகருடன் காதல், கவர்ச்சி போட்டோ சூட் என நடிகையை ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றி வந்தது. ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அம்மணி இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் இந்த நடிகையால் ஒரு குடும்பம் சிக்கலில் மாட்டியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது நடிகை தற்போது நடித்துவரும் படத்தின் இயக்குனருடன் அதிக நெருக்கம் காட்டுகிறாராம்.

இயக்குனருடன் நெருக்கம் காட்டும் நடிகை

இருவரும் திருமணம் செய்து கொள்ள பிளான் போட்டிருக்கும் நிலையில் இயக்குனர் தன் மனைவியை விவாகரத்து செய்யவும் ரெடி ஆகி வருகிறார். இதுதான் அரசல் புரசலாக இப்போது பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த விஷயத்தை கசிய விட்டதே நடிகை தான் என்றும் முன்னாள் கணவரை வெறுப்பேற்ற இப்படி அவர் செய்ததாகவும் கூறுகின்றனர். ஏனென்றால் நடிகையின் முன்னாள் கணவர் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

இதனால் நடிகை பற்றி பரிதாப கமெண்டுகள் ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் கடுப்பான நடிகை பதிலடி கொடுக்கும் வகையில் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் நடிகை

Trending News