வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

20 வயதில் ஐட்டம் டான்ஸ் ஆடி புகழின் உச்சிக்கு சென்ற நடிகை.. ஒரே படத்தால் தலைகீழாய் மாறிய மோசமான வாழ்க்கை

Item Dance Actress: நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி, கிடைக்கும் வாய்ப்பை ஏற்ற நடிகைகள் ஏராளம். அவ்வாறு புகழின் உச்சியை தொட்டுப் பார்த்து, அதன்பின் புரட்டிப் போடப்பட்ட நடிகை ஒருவரின் சோக கதையை இத்தொகுப்பில் காணலாம்.

அன்றைய காலகட்டத்தில் 14 வயதில் சினிமா வாய்ப்பை ஏற்று அதன் பின் 20 வயதில் உச்சம் தொட்ட நடிகை தான் ஜெயக்குமாரி. அவ்வாறு கவர்ச்சி நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் ஏற்ற எண்ணற்ற படங்கள் வெற்றியைக் கண்டிருக்கிறது.

Also Read: படுத்த படுக்கையில் உயிர் நண்பன், 45 வருடங்களுக்கு நன்றியுடன் இருக்கும் வைரமுத்து.. எழுந்து வா இமயமே!

மேலும் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். சிஐடி சங்கர், அனாதை ஆனந்தன், நூற்றுக்கு நூறு, மீண்டும் வாழ்வேன், காசேதான் கடவுளடா, கௌரவம் போன்ற பல படங்களில் தன் கவர்ச்சி நடனத்தை மேற்கொண்டவர்.

அன்றைய காலகட்டத்தில், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அதிக தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது அதை பொருட்டு இவர் கவர்ச்சி நடனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதைக் கொண்டு படிப்படியாக தன் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டு கார், பங்களா போன்றவற்றை வாங்கினார்.

Also Read: யாருக்கோ வந்த வினை என லண்டன் கிளம்பிய விஜய்.. பித்து பிடித்து திரியும் லோகேஷ்

செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்த இவர் படம் எடுக்க ஆசைப்பட்டு, ஏ எஸ் பிரகாசம் என்பவர் இயக்கத்தில் படம் தயாரிக்க முடிவெடுத்து தன் கையில் இருந்த பணங்களை செலவு செய்து, பின் கடன் வாங்கி படத்தை தயாரித்தாராம். இந்த ஒரு முயற்சி தான் அவரை வாழ்க்கையில் இந்த நிலைமைக்கு ஆளாக்கியது.

கடனாய் பெற்ற பணத்தை திரும்ப கட்ட முடியாமல், அனைத்தையும் விற்றும் கடன் அடையாது இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வாறு அனைத்தையும் இழந்து தற்போது நோய்வாய்ப்பட்டு தனிமையில் இருந்து வருகிறார். எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் வில்லனான நம்பியாரின் தங்கையாய் இடம் பெற்ற ஜெயக்குமாரி இவர்தான் என கூற முடியாத அளவிற்கு வறுமையை சந்தித்து வருகிறார்.

Also Read: 72 வயசு எல்லாம் என்ன, 86 வயசிலும் நடித்த அரக்கன்.. சூப்பர் ஸ்டாரை மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

Trending News