சின்னத்திரையில் இருந்து வந்த நடிகை தனது திறமையால் ஒரு முன்னிலை இடத்தை வகித்தார். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் நடிகை பணத்தாசையில் சகட்டுமேனிக்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதுவே அவருக்கு தொடர் சறுக்களை கொடுக்க ஆரம்பித்தது.
அவர் நடித்த படங்களில் கால்வாசி கூட வெற்றி பெறவில்லை. மேலும் நடிகையால் பல தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்ட நிலையில் இப்போது அவருக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள். மேலும் நடிகை சம்பாதித்த காசு எல்லாத்தையும் வெளியில் சுற்றியே கரைத்துவிட்டார்.
இப்போது செலவுக்கு காசு வேண்டுமே என்று நடிகை வேறு விதமான தொழிலில் இறங்கி இருக்கிறார். அதாவது ஒரு தொழிலுக்கு நடிகை விளம்பரம் செய்து வருமானம் பார்த்து வருகிறார். இதில் முதலீடு செய்தால் பல கோடி அல்லலாம் என்று வாக்குறுதிகளை வாரி விட்டு வருகிறார்.
Also Read : பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர்
மேலும் உங்கள் பணத்திற்கு நான் கேரண்டி என்று வாக்குறுதிகளையும் அள்ளி தெளித்து வருகிறார். இதை நம்பி மக்களும் பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் இது மோசடி கும்பல் என்று தெரிந்தால் நடிகையின் நிலைமை என்ன ஆகுமோ என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
ஏனென்றால் ஏற்கனவே இதே போல் தான் வேற்று மொழி நடிகை பணத்தாசையில் இதேபோன்று முதலீடு செய்ய சொல்லி கடைசியில் பல பிரச்சனைகளை சந்தித்தார். இதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் நடிகையும் இப்போது இதே வேளையில் இறங்கி இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.