
Gossip: ஹீரோக்களுக்கு இணையாக வருமானம் பார்த்து வரும் நடிகைக்கு தான் இப்போது மவுசு அதிகமாக இருக்கிறது. அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.
அதற்கேற்றார் போல் சம்பளத்தையும் ஒவ்வொரு படத்திற்கும் அதிகப்படுத்தி வருகிறார். இதனால் குஷியாக இருப்பது நடிகையின் காதலரான அந்த இளம் ஹீரோ தான்.
இருவரும் சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் நடிகரை விட நடிகை பல மடங்கு அதிகமாக சம்பாதித்து வருகிறார். அந்த வாய்ப்பை ஹீரோவும் பயன்படுத்தி கொள்கிறாராம்.
கண்ணை மறைக்கும் காதல்
என்னவென்றால் சொந்த படம் எடுத்து வரும் ஹீரோவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததே நடிகை தானாம். எப்படியாவது காதலர் பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை.
அதனால் கணக்கு பார்க்காமல் தாராளமாக காசை கொடுத்து வருகிறார். ஆனால் நடிகையின் பெற்றோர்களுக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.
இந்த ரிஸ்க் எடுக்காத காதல் கண்ணை மறைக்குது. இந்த காதல் கைகூடலைன்னா எல்லாமே வேஸ்ட்டா போயிடும் என எச்சரித்து இருக்கின்றனர்.
ஆனால் நடிகையோ அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் நடிகையின் வீட்டில் ஒரு புகைச்சல் புகைந்து கொண்டிருக்கிறதாம்.