Gossip: சோசியல் மீடியாவில் தற்போதைய ஹாட் டாப்பிக் அந்த ரியாலிட்டி ஷோ தான். வருஷா வருஷம் இந்த ஷோ ஆரம்பித்தாலே மற்ற சேனல்கள் அடிவாங்கிவிடும்.
அதில் இந்த முறை சில மாறுதல்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. தொடக்கத்தில் இதை ஆடியன்ஸ் அமர்க்களமாக வரவேற்றனர்.
ஆனால் போகப் போக நிகழ்ச்சியை பார்ப்பதையே சிலர் நிறுத்திவிட்டனர். இதனால் சில தந்திரங்களை செய்த சேனல் இப்போது ஆடியன்ஸை கவர்ந்துள்ளது.
ஆனால் நிகழ்ச்சியை நம்பி இருந்த நடிகை இப்போது மன வருத்தத்தில் இருக்கிறாராம். சோசியல் மீடியாவில் ரகளையான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் இந்த நாயகி.
பழைய ரூட்டை கையில் எடுத்த நடிகை
நடிப்பு கை கொடுக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியா அவரை வாழவைத்துக் கொண்டிருந்தது. அதற்கேற்றார் போல் தாராளமான புகைப்படங்களை போட்டு இவரும் பிரபலமானார்.
அதைத் தாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் நினைத்தார். ஆனால் ஷோவில் அழுமூஞ்சி பாப்பாவாக இவர் செய்த வேலைகள் கடுப்பை தான் வர வைத்தது
இதனால் விரைவிலேயே இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இப்படி நம்பியது கை கொடுக்காத நிலையில் நடிகை மீண்டும் பழைய பாதைக்கே திரும்பி விட்டாராம்.
மறுபடியும் போட்டோ சூட், கிளாமர் என திசை திரும்பி விட்டார். இதை வைத்து காலத்தை ஓட்டி விடலாம் என நடிகை இருக்கிறாரோ என்னவோ என காத்து வாக்கில் பேசப்பட்டு வருகிறது.