வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நம்ப வைத்து கழுத்தறுத்த நடிகர்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்

சில காலங்களுக்கு முன் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் சாக்லேட் பாய் நடிகர் மீது காதலில் விழுந்திருக்கிறார். அதன் விளைவாக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் நடிகரை விட நடிகைக்கு கொஞ்சம் வயசு அதிகம். அதனால் சில விமர்சனங்கள் ஏற்படும் என்பதற்காகவே அவர்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ முடிவு செய்தார்களாம்.

சில காலங்கள் இப்படியே கழிந்த நிலையில் நடிகர் ஒரு படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்று இருக்கிறார். சென்ற வேகத்திலேயே அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த புதுமுக நடிகையை அவர் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் நடிகைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதைக் கேட்டு பதறி போன நடிகை நடிகருக்கு போன் செய்து இது பற்றி கேட்டிருக்கிறார்.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

அதற்கு அந்த ஹீரோ அது உண்மை இல்லை என கூறி நடிகையை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் பரவி சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதமாகவும் மாறி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஊர் திரும்பிய நடிகரிடம் நடிகை சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். அதன் பிறகு தான் அவர் தனக்கு திருமணம் நடந்தது உண்மை என கூறியிருக்கிறார்.

மேலும் அந்த புது நடிகையிடம் தன் வேலையை காட்டியதால் அவர் தன்னை மிரட்டினார் என்றும் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டேன் என்றும் நம்பும் படியாக ஒரு பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கிறார். நடிகையும் அதை அப்படியே நம்பி இருக்கிறார். ஆனால் மறுநாள் இடி போல ஒரு செய்தி அவர் தலையில் வந்து விழுந்திருக்கிறது. அதாவது தன்னுடைய ரகசிய திருமணத்தை அந்த நடிகர் அதிகாரப்பூர்வமாக மீடியாக்களுக்கு அறிவித்தது மட்டுமல்லாமல் எல்லா சேனல்களுக்கும் பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

Also read: அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

இந்த நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாத நடிகை, நடிகர் பங்கேற்ற சூட்டிங் ஸ்பாட்டுக்கே நியாயம் கேட்க சென்றாராம். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்ட அந்த நடிகை சரமாரியாக அவரை அடிக்கவும் தொடங்கி இருக்கிறார். இதனால் அந்த படப்பிடிப்பு தளமே சற்று நேரம் ரணகளமாக மாறி இருக்கிறது.

அதை தொடர்ந்து ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அந்த நடிகை மயங்கியும் விழுந்திருக்கிறார். பிறகு தான் தெரிந்திருக்கிறது அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தான் அங்கே வந்திருக்கிறார் என்று. பின் எப்படியோ நடிகை காப்பாற்றப்பட்டிருக்கிறார். இருந்தாலும் நம்ப வைத்து கழுத்தறுத்த நடிகரின் துரோகத்தை மட்டும் அவர் இன்று வரை மறக்கவில்லையாம்.

Also read: போனா போகுதே என்று வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள்.. மார்க்கெட் உயர்ந்ததும் போடும் ஆட்டம்

Trending News