ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மீனாவை கொல்ல துடித்த நடிகை.. இந்த சின்ன விஷயத்துக்கு கொல பண்ற அளவா போவாங்க

நடிகை மீனா எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதில் இவர் சூப்பர் ஸ்டாரை ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என்று அழைக்கும் அந்த டயலாக் ரொம்பவும் பிரபலமானது.

அதன் பிறகு அவர் கதாநாயகியாகவும் திரைப்படங்களில் நடித்த ஆரம்பித்தார். அந்த சமயத்தில் இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தது சில விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அந்த ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த சோனியா போஸ், மீனா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, அந்த படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தோம். அப்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நான் பல காட்சிகளில் நடித்திருந்தேன்.

ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் என்னுடைய காட்சிகள் வரவில்லை. மீனாவும், ரஜினியும் இணைந்து நடித்த காட்சிகள் தான் அதிகமாக இருந்தது. இதனால் எனக்கு மீனாவின் மேல் ரொம்பவும் கோபம் வந்தது. அவரை கொன்று விடலாம் என்று கூட எனக்கு தோன்றியது.

ஏனென்றால் சூப்பர் ஸ்டாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கும்போது என்னுடைய காட்சிகள் இடம் பெறாமல் மீனாவுடைய காட்சிகள் மட்டும் வந்தது எனக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

இதனால் சிறிது நாட்கள் நான் மீனாவின் மேல் கோபமாக இருந்தேன் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு சோனியா கூறி இருக்கும் இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Trending News