வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு.. வாய்ப்புகள் தேடி வந்தும் கடுப்பில் இருக்கும் நடிகை

Gossip: வாய்ப்பு வராதா என பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சில பல வேலைகளையும் பார்த்து வருகின்றனர். ஆனால் வந்த வாய்ப்பை பார்த்து கடுப்பில் இருக்கிறார் ஒரு நடிகை.

ரசகுல்லா போல் இருக்கும் இந்த நடிகை ஆரம்பத்தில் கவனம் பெறவில்லை என்றாலும் தற்போது பாலிவுட் வரை பிரபலமாகி இருக்கிறார். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த இவருக்கு இடையில் வாய்ப்பு வராமல் இருந்தது.

அதை அடுத்து படங்களில் நிறைய தாராளம் காட்ட ஆரம்பித்தார். அதன் பலனாக பெரிய ஹீரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரிய ரீ என்ட்ரியாகவும் இருந்தது.

தேடிவந்த வாய்ப்பால் கடுப்பில் இருக்கும் நடிகை

அதேபோல் சில படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சம்பளத்தையும் உயர்த்தினார். அது மட்டும் இன்றி நட்பு வட்டாரத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேட்டதில் மறுக்க முடியாமல் சம்மதித்தார். அந்த பாடலும் ஹிட் அடித்தது.

ஆனால் இப்போது நடிகைக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஐட்டம் பாடலுக்கு ஆட சொல்லி தயாரிப்பாளர்கள் கேட்கிறார்களாம். நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற கதையாக நடிகை இப்போது அப்செட்டில் இருக்கிறார்.

பெரிய ஹீரோ படத்தில் நடித்தால் இன்னொரு ரவுண்டு வரலாம் என்று தான் நடிகை அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது அதே பாணியில் வாய்ப்பு வருவதால் நடிகை மன அமைதிக்காக ஆன்மீகம் பக்கம் திரும்பியுள்ளார்.

Trending News