சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சொந்தக்காசில் சூனியம் வைத்த நடிகை.. காதலர் வீட்டில் வெடித்த கலவரம்

Gossip: இந்திய அளவில் பேமஸாக இருக்கும் அந்த நடிகை சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். படம் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது.

அதிலும் நடிகை அந்த ஹீரோவுடன் காட்டிய நெருக்கம் பட ரிலீஸ் ஆகும் முன்பே விமர்சனம் ஆனது. முழு படத்தையும் பார்த்தால் கண் கூசும் அளவுக்கு இருக்கிறது அந்த நெருக்கம்.

ஏற்கனவே நடிகை இப்படித்தான் இளம் ஹீரோவுடன் எல்லை மீறி நடித்திருந்தார்.. ஆனால் இப்படி எல்லாம் நடித்தால் தான் தொடர்ந்து வாய்ப்பு வரும்.

காதலர் குடும்பத்தால் அப்செட் ஆன நடிகை

அதை தெரிந்து கொண்ட நடிகை இப்போது எதற்கும் தடை போடுவது கிடையாது. ஆனால் இது நடிகையின் காதலன் குடும்பத்திற்குள் புயலை கிளப்பிவிட்டதாம்.

சமீபத்தில் வெளிவந்த நடிகையின் படத்தை அவர் காதலர் குடும்பத்தோடு பார்த்திருக்கிறார். அதில் நடிகையின் அவதாரத்தை பார்த்த குடும்பத்தினர் கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டார்களாம்.

இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க கூடாது அப்படி இருந்தால் இந்த கல்யாணமே நடக்காது என எச்சரித்திருக்கிறார்கள். இதனால் நடிகை இப்போது செம அப்செட்டாம்.

இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது. காதலரும் குடும்பத்தினர் பேச்சை கேட்பதால் நடிகை இப்போது தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

Trending News