வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வறுமையில் பிறந்து சினிமா மூலம் புகழின் உச்சத்தை தொட்ட நடிகை.. ஹெலிகாப்டர் வைத்திருந்த பிரம்மாண்டம்

Famous Actress: அக்கால நடிகைகளை பொறுத்த வரை தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை ஏற்று நடித்திருப்பார்கள். அவ்வாறு வறுமையில் பிறந்து சினிமாவின் மூலம் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சியை தொட்ட நடிகை பற்றிய தகவல் இங்கு காண்போம்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்து, புன்னகை அரசி என பெயர் பெற்றவர். சிவாஜி, எம்ஜிஆருக்கு இணையாய் நடிப்பில் பின்னி பெடல் எடுத்த ஹீரோயின்களில் ஒருவர் தான் கே ஆர் விஜயா. தன் அழகான முக பாவனையாளும், நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர்.

Also Read: நிற்க கூட நேரமில்லாமல் 10 படங்களில் பிசியாக நடிக்கும் யோகி பாபு.. தலை சுற்ற வைக்கும் சொத்தின் மதிப்பு

மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து, அதன் பின் தன் திறமையை வெளிக்காட்டி நாடகம், சினிமாவில் புகழ் பெற்றார் கே ஆர் விஜயா. இதுவரை ரஜினி, கமல் போன்ற பல பிரபலங்களுடன் இணைந்து தன் உன்னதமான நடிப்பினை வெளிக்காட்டிய நடிகைகளில் இவரும் ஒருவர்.

அதைத்தொடர்ந்து இந்தியாவிலேயே அதிக படங்களில் நடித்த கதாநாயகி இவர் மட்டும்தான் என விரல் சுட்டி சொல்லும் அளவிற்கு தன் நடிப்பின் மூலம் தனித்துவம் கொண்டவர். அதைத் தொடர்ந்து தன் 100 வது படத்தின் வெற்றியை கொண்டாட இவர் மேற்கொண்ட பிரம்மாண்டமான விழா பெரிதும் பார்க்கப்பட்டது.

Also Read: வளரும் போதே ஆர்வக்கோளாறில் விஜய் நடித்த படம்.. அப்பாவை மதிக்காமல் கையில் எடுத்த ஆயுதம்

அக்காலத்திலேயே மாடி வீடு, நீச்சல் குளம், குதிரை வளர்ப்பு போன்ற அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் மிகப்பெரிய மிராசுதாரராய் வாழ்ந்தவர். வேலாயுத நாயக்கரின் 3 வது மனைவியான இவர் கருத்து வேறுபாடு இன்றி இன்றைய காலம் வரை ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

அவ்வாறு தன் கணவனின் பேச்சுக்குணங்க அவரின் அனுமதியோடு நடிப்பை மேற்கொண்டு சுமார் 58 ஆண்டுகள் சினிமா அனுபவம் கொண்டவர் கே ஆர் விஜயா. அதிலும் குறிப்பாக தனக்கென சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரை விட்ட 2 ரசிகர்கள்.. அஜித் செய்யாததை, செய்த நடிகர் சூர்யா

Trending News