செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சில்க் ஸ்மிதாவின் ஜெராக்ஸாக இருந்த நடிகை.. 24 வயதிலேயே கொடூரமாக கொல்லப்பட்டு மரணித்த சம்பவம்

Actress Silk Smitha: சில்க் ஸ்மிதா தமிழ் மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் எந்த அளவுக்கு புகழோடு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இல்லாமல் டாப் ஹீரோக்களின் படங்களே கிடையாது என்னும் அளவுக்கு இவர் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து பிசியாக இருந்தார். அதே நேரத்தில் அவருக்கு போட்டியாக பல கவர்ச்சி நடிகைகளும் களம் இறங்கினார்கள்.

ஆனால் யாராலும் சில்க் அளவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இவருடைய ஜெராக்ஸ் ஆக வந்தவர் தான் நடிகை ராணி பத்மினி. 19 வயதிலேயே நடிக்க வந்த இவர் 24 வயதிலேயே கொடூரமாக கொல்லப்பட்டு மரணித்தது தான் பெரும் சோகம். மலையாளம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிப்போன இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: திருமணத்திற்காக பிரபலத்திடம் கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்!

ஆனால் தமிழைப் பொருத்தவரை இவர் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே அந்த காலகட்டத்தில் கிடையாது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் தனக்கு நம்பிக்கையானவர்கள் என்று நினைத்த மூன்று பேரால் அநியாயமாக கொல்லப்பட்டார்.

அதாவது இவர் பிஸியாக இருந்த காலகட்டத்தில் அண்ணா நகரில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வந்தார். அப்போது தங்களுக்கு உதவியாக இருப்பதற்காக இன்டர்வியூ மூலம் மூன்று பேரை தேர்ந்தெடுத்து வீட்டு வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். அதன்படி சமையல்காரர், வாட்ச்மேன், டிரைவர் ஆகிய மூவரும் ராணி பத்மினி மற்றும் அவருடைய அம்மாவிற்கு உதவியாக இருந்திருக்கின்றனர்.

Also read: சிலுக்கின் காதல் வலையில் சிக்கிய 4 பிரபலங்கள்.. தாடிக்காரரால் மரணத்தை தழுவிய சோகம்

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்த இந்த நடிகை தன்னிடம் இருக்கும் பணம், தான் சம்பாதிப்பது உள்ளிட்ட அனைத்தையும் இவர்கள் முன்பாகவே பேசி இருக்கிறார். அங்கு தான் வினையே ஆரம்பித்தது. இவருடைய பணத்திற்கும், நகைக்கும் ஆசைப்பட்ட அந்த மூன்று பேரும் இவரையும் அவருடைய அம்மாவையும் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சடலங்களை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் மட்டும் தப்பித்து சென்றிருக்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் இந்த நடிகையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது திரையுலகில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. இவ்வாறு 24 வயதிலேயே அநியாயமாக இறந்து போன இந்த நடிகை இன்னொரு சில்க்காக வந்திருக்க வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: நான் செத்தா நீ வருவியா.? ஹீரோவிடம் கேட்ட சில்க், 2 நாளில் பலித்த விபரீத ஆசையை நிறைவேற்றிய நடிகர்

Trending News