சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தனுஷின் தோல்வி படத்தால் தேசிய விருது வாங்கிய கீரி நடிகை.. மார்க்கெட்டை தக்க வைத்த தந்திரம்

தனுஷ் நடிப்பில் பயங்கர பிளாக் ஆன படம் ஒன்றில் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இழுத்து வைத்து முத்தம் கொடுத்து விட்டதாக சொன்ன கீரி நடிகை, அந்தப் படத்தில் கொடுத்த ஒரு எக்ஸ்பிரஷனை வைத்து தான் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்த படத்தின் வாய்ப்பு கிடைத்திருப்பதை அவருடைய அம்மா நடிகை மேகனா சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக சொல்லியது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

2016 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரில்லர் கலந்த காதல் திரைப்படம் தான் தொடரி. இந்த படத்தில் பூச்சியப்பனாக தனுஷும் சரோஜாவாக கீர்த்தி சுரேஷும் அசத்தலான நடித்திருப்பார்கள். அதிலும் கீர்த்தி சுரேஷ் அப்பாவியான கிராமத்து பெண் போல் அச்சு அசலாக நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை.

Also Read: படப்பிடிப்பிலேயே தனுஷை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ஓவர் ஆட்டத்தால் பறிபோன பட வாய்ப்பு

இதில் இடம்பெற்ற ‘போன உசுரு வந்துருச்சு என்ற பாடலில் கீர்த்தி சுரேஷ் கொடுத்த ஒரு எக்ஸ்பிரஸனை வைத்து தான் அவருக்கு சாவித்திரியாக நடிப்பதற்கான வாய்ப்பு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கிடைத்தது. தொடரி படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் கீர்த்தி சுரேஷ் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தப் படத்தின் மூலம் தான் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததை நினைத்து மிகவும் பெருமைப்பட்டார்.

ஏனென்றால் தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு சீனை பார்த்த பிறகு தான் நடிகையர் திலகம் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் சாவித்திரி ஆக நடிக்க சரியான ஆள் இவர்தான் என்று அந்தப் பட வாய்ப்பை தூக்கி கொடுத்திருக்கிறார். எனவே ஓடாத படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை தந்திரமாக தக்க வைத்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

Also Read: எல்லாமே அட்டு பிளாப், நீங்கெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல.. படுதோல்வியை சந்திக்கும் தனுஷ் பட நடிகை

அதன் பிறகு தான் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல இன்னும் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நிறைய பட வாய்ப்புகளைப் பெற்று தென்னிந்தியாவின் டாப் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்காமல் போயிருந்தால் அவருக்கு நடிகையர் திலகம் பட சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. அவருக்கு தேசிய விருதும் வந்திருக்காது.

தொடரி படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்ததால் கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேகனா இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாமே என கேட்டபோது, தொடரி படத்தின் மூலம் தான் தனக்கு மிகப்பெரிய வாய்ப்பான நடிகையர் திலகம் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது என்று பெருமையுடன் சொன்னதாக மேகனா சமீபத்திய பேட்டி தெரிவித்திருக்கிறார்.

Also Read: தேடி போய் கால்ஷீட் கொடுத்தும் தட்டி கழித்த பிரபல நிறுவனம்.. ரஜினி விரித்த வலையில் சிக்கிய முன்னாள் மருமகன்

Trending News